பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAASAA AAAASASASS به کسبدهم. 83 காலமும் கவிஞர்களும் என்பது அவர் வாக்கு. நல்ல இளைஞர்கள் நாட்டில் ஏரா ளமாக விருந்தால், அந்த நாடு சிறந்த நாடாக இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ? காப்பன காத்துக் கடிவன கடிந்து நல்லொழுக்கத்தில் ஒழுகி யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த குறிக் கோளுடன் வாழும் மக்கள் ஒரு நாட்டில் இருந்தால் அந்நாட்டிலுள்ளார் எதையும் மெய்வருந்திப் பெறவேண் டியதில்லை ; எல்லாம் தாமாக வந்தெய்தும். மழையும் தவருது பெய்யும் ; நிலமும் குன்ருது விளையும்.

  • வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்’ : என்றல்லவோ வள்ளுவர் கூறுகின்ருர் ? பிறர் பொருட்டு என்ற உண்மையை யறிந்து விருந்தோம்பி வாழ்ந்தவர் நிலம் விதையிடாமலும் விளையக்கூடும் என்றல்லவோ வள்ளுவப் பெருந்தகை கூறுகின்ருர் ? இறுதியாக, நல்லதொரு நாட்டிற்கு ஒரு முக்கியமான அம்சத்தைக் கூறுகின்ருர். அஃது என்ன ? என்னதான் நலங்கள் பல பெற்றிருந்தாலும்; நல்ல வேந்தன் இல்லாத நாடு காடுதான் என்று சொல்லவேண்டும். கொடுங் கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே என்ற உண்மை நாமெல்லாரும் அறிந்தது தானே. அதனுல்தான் வன்ஞவப் பெருந்தகையும்,

  • ஆங்(கு) அமை(வு) எய்தியக் கண்ணும் பயம் இன்றே

வேந்(து) அமை(வு) இல்லாத நாடு.' என்று கூறுகின்ருர். குடியாட்சியுள்ள நாட்டில் வேந்தன் என்பதற்குத் தலைவன், முதல் அமைச்சன் என்ற 21. குறள்-35 22. குறள்-740.