பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு S3 AMMMAeeAAASSSAS பொருளே இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு கொள்ளுதல் வேண்டும். ' முறையறிந்(து) அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெ.'.கும் இறையறிந்(து) உயிர்க்கும் நல்கும் இசைகெழும் வேந்தன் காக்க.”* (முறை-நீதி ; அவா-வரிப் பொருள் மீதுள்ள ஆசை : முனிவுழி-சினங்கொள்ள வேண்டிய இடத்து; வெ.".கும்விரும்பும்; இறை-கடமைப் பொருள், வரிப்பொருள்; இசைபுகழ்.) அமையும் நாடே சிறந்த நாடென்பது வள்ளுவர் கொள்கை. அத்தகையவனுடைய நாடுதான் நாடாதுநாடா வளந்தரும் நாடாக விருக்கும். ஆகவே, திருவள்ளுவர் கண்ட நாட்டில் தள்ளா விளேயுளே உண்டாக்கும் உழவர்களும், தக்காரும், தாழ் விலாச் செல்வரும் இருப்பார்கள்; நாடும் கேடு அறியா ததாக இருந்து, கெட்ட விடத்தும் பல்வளங்களும் குன்ருது இருக்கப்பெறும் ; அந்நாடு பிற நாடுகளின் பாரத்தை யெல்லாம் தாங்க வல்லதாகவும், பிறநாட்டார் எல்லோரும் விரும்பத் தக்கதாகவும் இருக்கும் ; பலவித நீர்நிலைகளுடன் பொருந்தி, நாட்டின் அணிகளாகிய பிணியின்மை, செல்வம், விகளவு, இன்பம், பாதுகாப்பு ஆகியவைகளுடன்கூடி விளங்கும்; சிறந்த மன்னனையும் தலைவனுகப் பெற்றுள்ள அந்நாட்டில் வாழும் மக்கள் தேடி வருந்தாமல், நாடாத வளங்களையெல்லாம் பெறு வார்கள் என்பனபோன்ற வள்ளுவர் கூறும் கருத்துக்களை நெஞ்சகத்தில் இருத்துதல் வேண்டும். 23. கம்பரா. நாட்டு, செய். 19.