பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவை நோன்பு 85


SAASAASAASAASAASAASAAASSS S SSSM MMMMMMMS

லாய் வழங்கி வருகின்றது. இந் நோன்புக்குப் பாவை, இன்றியமையாததாய் இருந்து வந்ததாலும், பாவையர் களால் கொண்டாடப் பெற்று வந்ததாலும் இதை நாம் 'பாவை நோன்பு என்றே குறிப்போம். இஃது இன்று மார்கழி மாதத்தில் கொண்டாடப் பெறுவதால் மார்கழி நோன்பு என்று வழங்கி வருகின்றது. புண்டிருந்து இல்லறத்தார் நிகழ்த்தி வந்த இம் மார்கழி நோன்புக்கு நல்ல சான்றுகளாக இருப்பவை ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையும் மணி வாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவெம் பாவையும் ஆகும். பழைய நோன்பாகிய மார்கழி நோன்பைத் தமிழ்நாடு மறந்தே விட்டாலும், இன்றும் மார்கழி மாதத்தில் அருணுேதய காலத்தில் நீராடிச் சைவர்கள் திருவெம்பாவையையும் வைணவர்கள் திருப்பாவையையும் ஒதி ஆராதனை நடத்தி வருகின் றனர். இவ்வாறு ஆராதன செய்து சமயச் சடங்கு போலாகிவிட்ட இந்நிகழ்ச்சிக்கு இலக்கியங்களாக நின்று நிலவும் இந்த இரண்டு இசைத் தமிழ்த் செல்வங் களையும் தமிழர்கள் ஒப்பிட்டுப் படிக்கவேண்டும் ; படித்துப் பயன் பெறவும் வேண்டும். சில ஆண்டுகளாக எங்கும் திருப்பாவை திருவெம் பாவை மாநாடுகள் நடைபெற்று வருவதை நாம் செய்தித் தாள்கள் மூலம் அறிகின்ருேம். தமிழ் நாடு விட்டு அலுவல் நிமித்தம் சென்று பம்பாய், கல்கத்தா, டில்லி முதலிய வட நாட்டுப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவரும் தமிழர்களும் இம்மாநாட்டைத் தவருது நடத்தி வருகின்றனர். திருப்பாவை : திருப்பாவை சந்தம் பொலியும் பாமாலை"யாகத் தமிழ் இலக்கியத்தை அலங்கரித்து திற்கின்றது. சிறந்த இந்த இசைத் தமிழ்ச் செல்வத்தை