பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$领 காலமும் கவிஞர்களும் حبیہ جمتیہ معمہ، مہتمم நாலாயிர திவ்விய பிரபந்தம் என்ற நூலில் முதலாயிரத் தில் இரண்டாவது திவ்வியப் பிரபந்தமாகச் சேர்த்திருக் கின்றனர். இதில் முப்பது பாசுரங்கள் உள்ளன: வைணவர்கள் இதனே, " பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும், விேதம் அஜன்த்துக்கும் வித்தாகும் ” என்று பாராட்டிப் புகழ்ந்திருக்கின்றனர். பெண்மைக் குரிய காதலைத் தெய்வக் காதலாக்கியவள் பெரியாழ் வாரின் பெண்கொடி. அவளது தூய்மையான உள்ளத் தில் ஊற்று எடுத்த காதல் திருப்பாவை என்ற அழகிய ஒரு பாமாலையாக வடிவெடுத்து வந்திருக்கின்றது. அந்தத் தெய்வப் பூந்துணர்தான் அன்று முதல் இன்றுவரை மக்கள் மனத்திற்குத் துன்பம் அணுகாத இன்பத்தைத் தந்துகொண்டுள்ளது. இனி என்றும் தந்துகொண் டிருக்கும் என்பதற்கு ஐயமில்லே. சின்னஞ்சிறு வயது முதல் தன் தந்தையாகிய பட்டர்பிரான்' என்று சிறப்பிக்கப்பெறும் பெரியாழ்வார் வழியாகவும் பிறர் மூலமாகவும் கண்ணன் வரலாறு களைக் கேட்பதுபோலக் கேட்டு வந்தாள் இவள். அதல்ை,அந்தக் கண்ணனேயே தன் நாயகனுக அடைய வேண்டும் என்ற கருத்து இவள் உள்ளத்தில் கருக் கொண்டு வளர்ந்து வரலாயிற்று. அந்தக் காதலனே எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம்பக்திச் சுடர்-இவள் இதயத்தில் அணையாத விளக்காக எரிந்துகொண்டிருந்தது. அந்தக் காதலனே மறக்கவும் முடியவில்லை; அவனே விட்டுத் தப்பிப்போகவும் முடிய வில்லை. அந்த அழகுத் தெய்வம் இவளுடைய அகக் கண்ணுக்கும் தரிசனம் தரவில்லை. பாவம், என்ன செய்வாள் ? அந்த அவதார காலத்தில் தான் பிறக்க வில்லையே என்று ஏங்குகின்ருள். இது முடியக்கூடிய செயல் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அந்தக்