பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9{} காலமும் கவிஞர்களும் iS முதலாவதாக: இரண்டு பிரபந்தங்களிலுமுள்ள பாடல்களை மேம்போக்காகப் பார்க்கும்பொழுதே ஒவ் வொரு பாடலும் எம்பாவாய்' என்றே முடிந்து நிற்பதை அறியலாம். இத்தொடர் மாதர்கள் மார்கழி மாதத்தில் விடியற்காலையில் நீராடிய பிறகு தமது வழிபாட்டுக்கென ஈர மணலால் அமைத்த தேவியின் உருவத்தைக் குறிப்பதாகும் என்று ஊகித்தற்கு இட முண்டு. இந்த ஊகம் பொருந்துவதால்ை 'பாவை' என்பது பெண் தெய்வத்தின் பிரதிமையைக் குறிப்ப தாகும் என்று திரு. மு. இராகவையங்கார் அவர்கள் கருதுவர்." "நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ' (திருப். 2), நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினல் (திருப். 3), கபிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார் (திருப். 18) என்ற தொடர்களால் தேவியின் உருவம் ஒன்று அமைத்து வணங்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்தாகும். அது சரியான ஊகம் என்றே தோன்றுகின்றது. இரண்டாவதாக: மார்கழி மாதத்தில் மாதர்கள் வைகறையில் நீராடுவர் என்ற செய்தியைத் திருப் பாவையின் முதற் பாசுரம், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்ளைால் நீராடப் போதுவீர் ! போதுமினுே, நேரிழையீர்!’ என்று குறிப்படுகின்றது. இதே நீராட்டம் திருவெம் பாவையின் இறுதிப் பாட்டில், போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழி நீராடல்;” என்று குறிப்பிடப்பெற்றிருக்கின்றது. மார்கழி மாதத்தில் -بیستم است. حجم بسیاسی-مم-سی-سیم 3 மு. இராகவய்யங்கார்-ஆராய்ச்சித்தொகுதி.