பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102

களையே விரும்பிப்படிக்கும் இனிய சூழலே விரைந்து உருவாகி வருகிறது. அத்தகைய காலத்தின் இன்றியமையாத் தேவையை நிறைவு செய்யும் வகையில் கதை இலக்கியப் படைப்புலகமும் அச்சூழலுக்கேற்பத் தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆயத்த மாகிவருகிறது என்பதற்கான அறிகுறிகள் இன்று அதிகம் தென்படத் தொடங்கியுள்ளன.

விஞ்ஞான வள்ளுவர்

எதிர்காலத் தமிழ்ப் படைப்புலகம் எவ்வழியில் அமைய வேண்டும். வளர்ந்து வளமாக வலுவோடு நடைபோட வேண் டும் என்பதற்குக் காலததை வென்று வெற்றி நடைபோடும் வள்ளுவரே இதற்கும் வழிகாட்டுகிறார்.

தமிழ்ப் படைப்பிலக்கியம் எவ்வகையில் அமைய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறவந்த வள்ளுவர்,

'எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு'

எனக் கூறுகின்றார்.

"கணக்கை அடிப்படையாகக் கொண்ட அறிவியலும் எழுத்தை அடித்தளமாகக் கொண்ட இலக்கியங்களும் மக் களுக்கு இரு கண்களைப் போன்றவையாகும்' என்பது அவர் வாக்கு.

'எண்ணென்ப' என கணக்கை அடிப்படையாகக் கொண்ட அறிவியலை முதன்மையாகக் குறிப்பிட்ட வள்ளுவர் 'ஏனைய எழுத்தென் ப' எனக் கூறியதன் மூலம் அறிவியல் தமிழுக்கு அடுத்த நிலையையே இலக்கியம் முதலான துறை களுக்குத் தந்துள்ளார் என்பது நன்கு கவனிக்கத் தக்கதாகும்.

மேலும் "எண்ணென்ப' என்பதனை முதலில் கூறி 'ஏனைய எழுத்தென்ப' என்பதனைப் பின்னே கூறியதன் மூலம் அறிவியலின் அடிப்படையிலேயே இலக்கியப் படைப்புக் கள் உருவாக்கப்படவேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்தி வழிகாட்டுகிறார் அறிவியல் இலக்கியமே ஆற்றல்மிகு கருவி

எந்த ஒரு கருத்தையும் உணர்வையும் உண்மையையும் பல வரிக் கட்டுரைகளாக உரைநடையில் சொல்லுவதைவிட சிலவரிக் கவிதைகளில் சொல் நயத்தோடும் கற்பனை வளத் தோடும் கூறி எளிதாக உணர வைக்க இயலும். கூட்டலின்சுருக் கம் பெருக்கல் என்பதுபோல அறிவியல் உண்மையையும் உணர் வையும் கதைவடிவில் ஒருசில பாத்திரங்கள் மூலம் நடைமுறை