பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

128

இத்தகைய சுருக்க மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் கவிதை, புதி. ம் போன்ற படைப்பிலக்கிய பெயர்பபுகளாக அமையுமெனினும், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள், அறி விடல் நூலகள் ஆகியவையும் சுருக்கப் பெயர்ப்புகள் செய்யத் தக்கனவாகும். பாலுள் கலந்திருக்கும் நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவையின் தன்மையைக் கொண்டது இச்கருக்க மொழிபெயர்ப்புகள்.

8. தழுவல் மொழிபெயர்ப்பு

(Adopted Translation)

இவ்வகை மொழி பெயர்ப்புகள்தான் மொழிபெயர்ப்பு என்ற பெயரைப் பெறாமலே தமிழிலும் பிற உலக மொழிகளிலும் பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ள. இன்று நாம் பெருமை யுடன் போற்றும் காப்பியங்கள் பலவும் தழுவல் பெயர்ப்புகளாக அமைந்தவைதாம். அவைகளுள் மிகச்சிறந்த சான்றாக இன்றும் விளங்குவது கம்பராமாயணம் ஆகும். சேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களும் தழுவல் பெயர்ப்புகளேயாகும்.

தழுவல் மொழிபெயர்ப்பில் மூலமொழியில் கூறப்பட்ட கதைக் கருவை மட்டுமல்லாது முக்கிய சம்பவங்கள் பலவும் உரை யாடல் உட்பட இடம் பெறுவது தவிர்க்க முடியாததொன்றாகும்.

தழுவல் மொழிபெயர்ப்பு என்று வரும்போது மூலத்தை அப் படியே எடுத்துக்கொள்ளாமல் சில சமயம் தன் விருப்பு வெறுப் பிற்கேற்ப மாற்றங்களைச் செய்துகொள்ள இவ்வகை மொழி பெயர்ப்பில் வாய்ப்பேற்படுகிறது. மூல மொழி உரையாடல்களில் தேவையானவற்றை அப்படியே பெயர்த்தும் சுருக்கியும் சற்று விரித்தும் அல்லது ஆங்காங்கே மாற்றியும் அமைப்பர் வர்ணனைகளும் இவ்வாறே இடம் பெறும். பெயர்க்கப்படும் மொழியின் மரபு, பண்பாடு, சிறப்புத் தன்மைக்கேற்ப சொல்லு கின்ற முறையும் அமையும். சான்றாக, வால்மீகி இராமாயணத் தில் இராவணன் சீதையைத் தன் தொடை மீது தூக்கி வைத்துக் கொண்டு சென்றான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதைத் தமிழில் தரவந்த கம்பர், அந்நிய ஆடவன் ஒரு பெண்ணைத் தொட்டாலே அது அவளது கற்புக்குக் களங்க மேற்படுத்தியதாக ஆகிவிடும் எனும் தமிழ்ப் பண்பாட்டை நன்கு உணர்ந்து, தன் தழுவல் காப்பியமான கம்ப இாாமாயணத்தில், இராவணன் சீதையை பர்ண சாலையோடு பெயர்த்துத் தூக்கிச் சென்றான் எனக் குறிப்பிடுகின்றான். எனவே தழுவல் பெயர்ப்பில் மூல மொழியில் காணும் குறைபாடுகளை