பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

Í 25

இயலாததால் கதாபாத்திரங்களின் நடமாட்டப் போக்கறிந்து, அவர்களோடு ஒன்றி ரசிக்க முடிவதில்லை. இத்தகைய காரணங் களால் வேற்று மொழித் திரைப்படங்களை மக்கள் அதிகம் விரும் பிப் பார்க்கும் நிலை இல்லா திருந்தது.

தொடக்கத்தில் பேசும் படங்களாகத் தயாரிக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களை நம் நாட்டில் இறக்குமதி செய்து வெளியிடப்பட்டபோது, அந்தந்த மொழிப் பகுதி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் திரையரங்குகள் தோறும் "மொழிபெயர்ப்பாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். திரைப்படம் திரையில் ஒடும்போதே அப்படத்தின் கதையம்சத்தையும் உரை யாடல்களின் சுருக்கத்தையும் கூறிப் புரிய வைத்தனர். திரைப் படம் திரையில் ஒடும்போதே தனியே ஒலி பெருக்கி மூலம் இவர் கள் மொழி பெயர்ப்பும் படத்தோடு இணைந்து நிகழும். இத் தகைய மொழிபெயர்ப்பு வசதி நகரங்களில் அமைந்த ஒரு சில திரையரங்குகளில் இருந்தனவே தவிர, எல்லாத் திரையரங்குகளி லும் இவ்வசதி இருந்ததாகக் கூற முடியாது.

மேலும், நாளடைவில் படங்களும் திரையரங்குகளும் பல்கிப் பெருகினமையால் போதிய அளவில் இருமொழி அறிந்த திரை அரங்க மொழி பெயர்ப்பாளர்கள் கிடைப்பதும் அருமையாகி விட்டது.

எனவே, எல்லாத் திரையரங்குகளிலும் திரைப்படம் பார்ப் போர் அனைவரும் கதையம்சங்களையும் உரையாடல் சுருக்கங் களையும் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் அமைந்ததே "திரைப்பட சாரப் பெயர்ப்பு' (Sub-title Translation) எனும் பெயர்ப்பு முறை. கதை, உரையாடல்களின் சாரத்தை தேவை யான மொழியில் இரண்டொரு வரிகளில் சம்பவ நிகழ்வின் போதே திரைப்படக் காட்சியின் அடிப்பகுதியில் வருமாறு அமைத்தனர். கதையம்சம், உரையாடல் சாரம், பாத்திரக் குணச்சித்திரப் பிரதிபலிப்பு அனைத்தையும் உட்கொண்டதாக இவ்வரிகள் அமைதல் அவசியம்.

இம்முறை செயல் வடிவம் பெற்ற பிறகு படிக்க தெரிந்த மக்கள் அனைவரும் திரையில் ஒடும் திரைப்படத்தின் கதை, உரையாடல், பாத்திரத்தன்மை அனைத்தையும் ஒரு சேர அறிந்து இன்புற முடிந்தது.