பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

187

மொழித் தூய்மையினும் கருத்துத் தெளிவுக்கே முதலிடம்

அறிவியல் மொழிபெயர்ப்பில் மொழித் தூய்மையைக் காட்டி லும் கருத்துணர்த்தும் போக்குக்கே முதலிடம் தரப்பட வேண் டும். இத்தகைய தருணங்களில் தவிர்க்க முடியா நிலையில் வட மொழிச் சொற்களையோ அல்லது கிரந்த எழுத்துக்களையோ பயன்படுத்த நேரின் அவ்வாறே பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

சட்டமும் அறிவியலே

அறிவியல் மொழிபெயர்ப்புக்கான அடிப்படை பண்புகளை அடியொற்றியே சட்ட நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனெனில் சட்டமும் ஒரு வகையில் அறிவியலைப் போன்ற தன்மையுடையதேயாகும். அறிவியலைப் போலவே சட்டமும் நுட்பமான கருத்துக்களைக் கொண்டதாகும். சட்டத்தைத் தெளிவாக மொழிபெயர்க்கு முன் சில உணர்வுகளை அழுத்த மாக நெஞ்சத்திலிருத்திக் கொண்டு பெயர்ப்புப் பணியை மேற் கொள்வது நலம். முதலாவதாக, சட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் தெளிவாக இருக்க வேண்டும். தெளிவில்லாது குழப்ப மேற்படுத்தும் சொற்களுக்கு அங்கு இடமே இருக்கக் கூடாது. சட்டத்தில் வரும் ஒரு சொல் ஓரிடத்தில் ஒரு பொருளைத் தந் தால், அச்சொல் அதே பொருளைத் தரும் வகையில் தான் மற்ற இடங்களிலும் இடம் பெறுதல் வேண்டும்.

மூலத்தைவிட தெளிவு தரும் மொழிபெயர்ப்பு

ஆனால், சில சமயங்களில் ஒரு சட்டச் சொல்லுக்கு ஒரு இடத்தில் ஒரு பொருளும் அதே சொல்லுக்கு வேறு இடத்தில் வேறு பொருளும் இருப்பதுண்டு. சான்றாக, இருவருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஒருவர் நடக்கத் தவறியதன் விளைவாக மற்றவர் பொருள் இழப்புக்கு ஆளாக நேர்வதுண்டு அவ்வாறு இழப்புக்கு ஆளானவர், மற்றவர் மீது வழக்கிட்டுத் தன் இழப் புக்கு ஈடு கோரலாம் இதனைச் சட்டம் Damages என்ற சொல் லால் குறிக்கிறது. இதனைத் ஏற்பட்டுவிட்ட இழப்புக்கு ஈடாகப் பெறுவது' எனும் பொருளில் தமிழில் இழப்பீடு என்று கூறுவது பொருத்தமாகும். இஃது கருதிய பொருளைத் திட்பமாகவும் தெளிவாகவும் விளக்குவதாக உள்ளது. இவ்வாறே, கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒருவர், மற்றவரைப் பற்றி அவ தூறாகப் பேசலாம். இதனால் மற்றவர் கடுமையான அவமானத் திற்கு ஆளாகலாம். அவமானத்தால் பாதிக்கப்பட்டவர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தனக்கேற்பட்ட அவமானத்