பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

150

ஆங்கில வடிவெடுத்த லத்தீன், கிரேக்கச் சொற்கள்

ஆங்கில அறிவியல் கலைச்சொற்களின் பிறப்பு வரலாற்றை ஆராய்ந்தால் சில உண்மைகள் நமக்குப் புலப்படும். இன்றைக்கு ஆங்கிலத்தில் கையாளப்படும் அறிவியல் கலைச் சொற்களில் பலவும் ஆங்கில மூலச் சொற்களாக உருவாக்கப்பட்டவை போலத் தோற்றமளித்தாலும் அவைகளில் பெரும்பாலான சொற்களின் லவடிவம் லத்தீன், கிரேக்க மொழிச் சொற்களே என்பதை மறந்துவிடக் கூடாது. இச்சொற்கள் ஆங்கில மொழி ஒலிப்பு முறைக்கேற்ப சிற்சில மாறுதல்களைப் பெற்று ஆங்கிலச் சொற்கள்போல் வழங்கி வருகின்றன. இதனால், ஆங்கில மொழி யின் தூய்மையோ, பெருமையோ முற்றாகச் சிதைந்து விட வில்லை. மாறாக, வலுவும் தெளிவுமுடைய மொழியாக வளர்ந்து வளம் பெற்றுள்ளது என்பது எண்ணிப் பார்க்கத் தக்கதாகும்.

இதற்காக கண்ணை மூடிக்கொண்டு பிறமொழிச் சொற் களையோ அன்றி கிரந்த எழுத்துக்களை எடுத்தாள வேண்டும் என்பதில்லை. தவிர்க்க முடியா நிலையில் தூய்மையினும் பொருள் தெளிவுக்கு முதன்மை தந்து, கிரந்த எழுத்துக் களையோ பிறமொழிக் கலைச் சொற்களையோ ஒருசில மாற் றங்களுடன் ஏற்பதில் தவறில்லை. இம்முறையையே புத்துலகத் துறையாகத் தமிழில் கால்கொண்ட அறிவியல் தொடர்பான கலைச் சொற்களைத் தொடக்க காலம் முதற்கொண்டே கைக் கொண்டனர் என்பது வரலாற்று உண்மையாகும்.

தமிழ்க் கலைச் சொல்லாக்க முயற்சிக்கு உந்து சக்தியான அமெரிக்க மருத்துவர்

அறிவியல் தமிழ்க் கலைச் சொல்லாக்கச் சிந்தனை முளை விடத் தொடங்கியதே 880 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் என்பது வரலாறு ஆகும் இதே கால கட்டத்தில்தான் அறிவியல் தமிழ்க் கலைச் சொல்லாக்க முயற்சி இலங்கையிலும் நடைபெற லாயிற்று. இம்முயற்சிக்கு அங்கு ஒரு பெரும் உந்து சக்தியாக அமைந்தவர் ஃபிஷ் கிரீன் எனும் மருத்துவப் பேராசிரியர் ஆவார்.

1847ஆம் ஆண்டில் மருத்துவத் துறைப் பேராசிரியராக வந்த டாக்டர் ஃபிஷ் கிரீன் தான் முதன்முறையாக மருத்துவக் கல்வியைத் தமிழில் போதிக்கும் முயற்சியை மேற்கொண்டவர்.

இவர் காலம்வரை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழில் அறிவியலை எழுதியவர்கள் வடமொழிச் சொற்கள்