பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

154

தூய தமிழ்க் கலைச் சொல் தொகுதி

இவ்வமைப்பு கலைச் சொல் தயாரிப்புக் குழு ஒன்றை அமைத்தது இக்குழு கலைச் சொற்களை உருவாக்கும் பணியில் முனைப்புக் காட்டி உழைத்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு 1988இல் ஓரளவுக்குத் தூய தமிழில் அமைந்த 5,000 கலைச் சொற்களைக் கொண்ட தொகுதியொன்றை வெளியிட்டது. இத்தொகுதியில் இடம் பெற்ற கலைச் சொற்கள் பல ராலும் ஏற்கப்பட்டுப் பாராட்டுப்பெற்றன. அடுத்த இரண் டாண்டுகள் அரிதின் முயன்று 1988ஆம் ஆண்டில் 10,000 கலைச் சொற்களடங்கிய மறுபதிப்பு வெளிவந்து பள்ளிப் பாட நூல்களில் இச்கலைச் சொற்களைப் பயன்படுத்துமாறு ஆசிரியர் களுக்கு சென்னை மாகாண அரசு பரிந்துரை செய்தது.

கிடப்பில் போடப்பட்ட கலைச் சொல் தொகுதி

பின்னர், 1940 ஆம் ஆண்டில் சீனிவாச சாஸ்திரி தலைமை யில் அரசு ஒரு தமிழ்க் கலைச் சொல்லாக்கக் குழுவை உருவாக் கிய து சமஸ்கிருதப் பாண்டியத்தியமும் ஆங்கிலப் புலமையுமிக்க இக்குழுவினரின் போக்கு அன்றையத் தமிழறிஞர்களால் ெரி தும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இக்குழுவின் பணியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. எனவே, இக்ழுவினர் தயாரித்த கலைச் சொற்கள் நீண்டநாள் கிடப்பில் கிடைக்கும்படியாயிற்று. அதன் பின்னர், நாடு விடுலை பெற்ற 1947ஆம் ஆண்டில்தான் இக்குழு வினர் தயாரித்தளித்திருந்த கலைச் சொற்களைப் பள்ளிகளில் பயன்படுத்த அரசு அங்கீகாரமும் பரிந்துறையும் கிடைத்தது.

மொழித் தூய்மைக்கு முதலிடம் தந்த இலங்கைக் கலைச்சொல் முயற்சி

இதே காலகட்டத்தில் இலங்கையில் கலைச் சொல்லாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அரசாங்க ஆதரவுடன் கலைச் சொல்லாக்கக் குழு அமைந்து பணி மேற்கொள்ளப்பட் டது 1955ஆம் ஆண்டிலாகும். தமிழகக் கலைச் சொற்களில் பெருமளவில் சமஸ்கிருதச் சொற்கள் இடம்பெற்றதற்கு மாறாக, இலங்கை கலைச் சொற் குழு தயாரித்த கலைச்சொற்கள் நல்ல தமிழில் அமைக்கப்பட்டிருந்தன என்பது சுவனிக்கத்தக்கதாகும். இப்பணியில் முன்னோடியாக விளங்கிய ஃபிஷ் கிறீன் கலைச் சொல்லாக்கத்திற்கென வகுத்துச் சென்ற விதிமுறைகளில் பெரும் பாலானவற்றை அடியொற்றித் தமிழ்க் கலைச்சொற்கள் இலங்கையில் உருவாக்கப்பட்டன. கருத்துச் செறிவு, பொருட்