பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

168

முறையான தமிழ்க் கலைச் சொல்லாக்கம் பெறுவதற்குமுன் ஆங்கிலக் கலைச்சொல்லின் உட்பொருளை அறிந்து, அதனை அடியொற்றியே தமிழில் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகை யில் கலைச் சொல்லை உருவாக்க முயல்தல் வேண்டும். மூலச் சொல்லின் பொருள் நுட்பத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவல்ல தமிழ் வேர்ச் சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இலக்கண விதிமுறைக்கிணங்க பகுதி, விகுதிகளை அமைத்துப் புதிய தமிழ்க் கலைச் சொல்லை உருவாக்கலாம். இத்தகைய கலைச் சொல் மொழிபெயர்ப்பின்போது ஆங்கில வேர்ச் சொல்லின் அடிப்படை யிலேயே தமிழ் வேர்ச் சொல்லை தேர்வு செய்தல் எல்லா வகை யிலும் சிறப்புடையதாயிருக்கும். எனவே மூலச்சொல்லின் பொருள் நுட்பத்தை அறியவும் புதிய தமிழ்க் கலைச் சொல்லை உருவாக்கவும் மொழி பெயர்ப்பு என்பது இன்றியமையாத் தேவையாக கலைச் சொல்லாக்கத் துறையில் அமைந்துள்ளது.

சமஸ்கிருதம் வழி ாகப் பெயர்ப்பு

கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்க் கலைச் சொற் களில் பெரும்பாலானவை ஆங்கிலத்திலிருந்து சமஸ்கிருதத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட கலைச் சொற்களாகும். தற்காலத்தில் இச் சமஸ்கிருதக் கலைச்சொற்கள் தூய தமிழுக்கு மீண்டும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. விளக்கம் தரும் சமஸ்கிருதப் பெயர்ப்பு

தமிழில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் காண முயன்ற தொடக்க காலத்தில் ஆங்கிலத்திலிருந்து சமஸ்கிருத வடிவிலான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆங்கிலக் கலைச்சொல்லுக்குச் சமமான கலைச் சொல்லாகப் பயன்படுத்து வதைவிட கலைச் சொல்லின் பொருள் நுட்பத்தைத் தெளிவாகப் புரியும்படி செய்வதாகவே இருந்திருக்கிறது. எனவே, இன்றும் கூட ஆங்கில அறிவியல் கலைச் சொற்களைப் பெயர்க்கும் போது இருவகைகளில் பெயர்ப்பது தவிர்க்க முடியாததாகவுள் ளது. முதல்வகை கலைச் சொல் பெயர்ப்பு பொருளைத் தெளி வாக்கும் வகையில் சற்று விளக்கமாக அ ைதைல் வேண்டும். மற்றது மாற்றுக் கலைச் சொல்லாக சொற்செட்டோடு கூடிய தாகவும் எளிமையும் தெளிவுமுடையதாக சுருங்கிய வடிவில் அமைவது. விளக்கமான சொற்களே நாளடைவில் சுருங்கிய வடிவில தானாகவே உருப்பெற்று அமையும். சான்றாக "Pin code' முறை அமுலுக்கு வந்தபோது, இதனைத் தமிழில் 'அஞ்சல் குறியீட்டு எண்' என்று பலராலும் பெயர்த்துப் பயன்படுத்தப் பட்டது. ஆனால், இன்று அதன் நீளம் குறைந்து குறி எண் எனக் குறிக்கப்படுகிறது