பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

168

விட்டது. இறப்பு எப்போது என்பது தெரியாத நிலையில், வாழு கின்ற காலத்தைக் குறிக்க வாழ்நாள் எனக் கூறுகிறோம். 'நாள்' என்ற சொல்லால் காலத்தைக் குறிப்பது தமிழ் மரபு. அதற்கிணங்க வருகின்ற காலத்தை வரு நாள் என அமைத்து "லாஜி' (Logy) என்ற பின்னொட்டுக்கு இயல்’ எனக் கொண்டு 'வருநாளியல்' என்ற முழுமையான கலைச்சொல்லை உருவாக்கு கிறோம். இது ஃப்யூச்சராலஜி என்ற புது அறிவியல் சொல் லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக அமைகிறது.

இவ்வாறு, கலைச்சொல் உருவாக்கத்துக்குப் பழந்தமிழ் இலக்கியங்களையும் அன்றாட வாழ்வில் புழங்கும் வழக்குச் சொற்களையும் துணைக் கொண்டு தமிழ்க் கலைச் சொல்லாக்க வளம் பெறலாம்.

&

சில சமயங்களில் படிப்பறிவில்லாத சாதாரண பாமர மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திவரும் வழக்குச் சொற்களே சிறந்த கலைச் சொற்களாக அமைவதுண்டு. புற்று நோயில் வரும் ட்யூமர்' (Tumour) என்ற சொல்லுக்குச் சரியான கலைச் சொல்லாக, கழலை' என்ற பெயரைப் பயன்படுத்தலாம். இச் சொல் சாதாரண மக்களிடையே வழங்கி வரும் வழக்குச் சொல் லாகும்.

இதே போன்று எத்தனையெத்தனையோ கலைச் சொற்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் அன்றாட ம் வழங்கி வருகின் றன. காரணம், எந்தக் கருவியாக இருந்தாலும் இயந்திரமானா லும் அவற்றின் செயற்பாட்டிடின் அடிப்படையில் அதற்கான சொல்லை அவர்களாகவே அமைத்துக் கொடுத்து வழங்குகிறார் கள். செயலின் அடிப்படையில் அமைக்கப்படும் கலைச்சொற் களே சரியான சொற்களாக வலுவோடு அமைய முடியும்.

அறிவியல், தொழில் நுட்பக் கலைச்சொற்களை சாதாரண மொழியறிவுள்ளவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்க வேணடும்.

ஆங்கில விதிமுறைகளையொட்டித் தமிழ்க் கலைச் சொற்கள்

அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்து வதில் ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகள் வரன்முறை யான சில விதிகளைக் கடைபிடித்து வருகின்றன . இதனால், அவர்கட்கு இலகுவாக அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொற்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் இயலுகின்றது. நாமும் அம்முறைகளைப் பின்பற்றியொழுகுதலே சாலச்சிறந்தது.