பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

172

கலைச்சொல்லாக்கப் பணி என்பது ஒரு தொடர் பணி யாகும். எனவே, உலகெங்கும் உருவாக்கப்படும் கலைச் சொற் களைத் தொடர்ந்து தொகுக்கவும், கலைச் சொல்லாக்க நெறி முறைகளை வகுக்கவும் இறுதிமுடிவாகத் தரப்படுத்தப்பட்ட கலைச் சொற்களைக் கொண்ட அகராதிகளை வெளியிடவும் இக்குழு தொடர் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை 81 மொழிகளில் 65 நாடுகளில் சுமார் 280 கலைச் சொல்லாக்கக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. இவ்வமைப்பு களோடு நெருக்கம் கொண்டு உதவி ஒத்துழைப்புகளை உலக ளாவிய முறையில் பெற முயல வேண்டும். இதன் மூலம் உலகெங் கும் வாழும் தமிழர்களும் தமிழும் மிகு பயன்பெற வாய்ப்பேற் படும் என்பது திண்ணம்.

இவ்வகையில் உருவாகி ஆழமும் அழுத்தமும் கொண்டு திலைபெறும் அறிவியல் சொல்லாக்கச் சொற்களையே இன்றை யத் தமிழ் தேடிக் கொண்டிருக்கிறது. அதனை எளிதாக தேடிக் கொடுக்கும் பெரும் பணி தமிழர் முன் தலைதுாக்கி நிற்கிறது. இதன்மூலம்; அறிவியல் தமிழ் மட்டுமல்ல இலக்கியத் தமிழும் பெருமையுறும் என்பதில் ஐயமில்லை.