பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16

கொண்டனர். நடக்கவிருக்கும் ஆறாவது உலகத்தமிழ் மாநாட வது அறிவியல் தமிழ் வளர்ச்சி பற்றிய ஆய்வு மாநாடாக அமைய வழிகாண வேண்டும் என வேண்டினேன். கூட்ட இறுதி யில் டத்தோ ச. சாமிவேலு அவர்கள் பேசும்போது, நடக்க விருக்கும் ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மா நாட்டின் கருப் பொருளாகவே அறிவியல் தமிழ் அமையும் என உறுதி கூறிய தோடு காலத்தின் தேவை கருதி அன்று நான் ஆற்றிய உரை யின் அடிப்பட்ையில் ஒரு நூல் எழுதி வழங்க வேண்டும் வேண்டு கோள விடுத்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட நண்பர்களும் இதே கருத்தை வலியுறுத்திக் கூறினர். உற்சாக வார்த்தைகள் நூல எழுத வேண்டும் என்ற என் எண்ணத்தை வலுப்படுத்தின.

அறிவியல் தமிழ் தொடர்பான சிந்தனைகளுக்கு வரலாற்று அடிப்படைகளை ஆராய்ந்து கூறும் வகையில் என் ந்தனை களுக்க எல்லை வகுத்து எழுதத் தொடங்கினேன். அதுவே, நூலுருவில் இப்போது உங்கள் கரங்களில் தவழுகிறது.

அறிவியல் தமிழ் தொடர்பான எந்த முடிவையும் அறுதி யிட்டு முடிவு செய்து கூறுவது இந்நூலின் நோக்கமல்ல, மொழி பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, சொல்லாக்கம், எழுத்துச் சீர்மை போன்றன. பலரும் நினைப்பதுபோல் தமிழில் புதிதாகத் தோன்றி வளர்ந்துவரும் இயல்கள் அல்ல. அவற்றின் அடித்தளம் இரண் டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இருந்தே வந்துள்ளன என்ற வரலாற்று உண்மையையும் அவற்றை காலத்தின் தேவை நிமித்தம் கட்டுக்கோப்பான வரன்முறைகளோடு கூடிய தனி யியல்களாக வளர்க்க நாம் மேற்கொள்ள வேண்டிய சிந்தனை களையும் செயற்பாடுகளையும் பரிமாறிக் கொள்வதேயாகும்.

இந்நூலை இனிது எழுதி முடித்து வெளியிட எல்லா வகை யிலும் எனக்குத் தூண்டுகோளாக அமைந்த என் துணைவியார் திருமதி சித்தை செளதா அவர்கட்கும் சிறப்பான முறையில் குறுகிய காலத்தில் அச்சிட்டு வழங்கிய மீரா பிரஸ் பணியாளர் கட்கும் அழகிய வடிவில் அட்டைப் படத்தை வரைந்துதவிய ஓவியர் கலைமதி அவர்கட்கும் இச் சமயத்தில் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

எனது மற்ற நூல்களை ஏற்று ஆதரித்தது போன்றே இந் நூலையும் வாசகர்கள் ஆதரித்து ஊக்குவிப்பார்கள் என நம்பு கிறேன்.

அன்பன் மணவை முஸ்தபா

ஆசிரியர்