பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

197

சென்ற அசோகர் மகனும் மகளும் கூட, தமிழ்நாட்டின் வழியே இலங்கை சென்றதாகச் சான்றிலலை. அவர்கள் கிருஷ்ணா நதி முகத்துவாரத்திலிருந்து இலங்கை சென்றதாக வரலாறு கூறு கிறது.

அது மட்டுமல்ல, அசோகர் உலகெங்கும் புத்த சமயதைப்

பரப்பப் பிரச்சாரர்களை அனுப்பினார். ஆனால், தமிழகத்திற் குப் புத்த சமயப் பிரசாரத்திற்கென யாரையுமே அனுப்பியதாகத் தகவல் இல்லை. எனவே, அரசியல் அடிப்படையிலோ சமய அடிப்படையிலோ அசோகர் தமிழகத்துடன் எ , தகைய தொடர் பும் கொண்டிருந்ததாக வரலாறு இல்லை இந்நிலையில் அசோகரால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட மொழியாக, அவர் நிறுவிய ஸ்தூபிகளில் இடம்பெற்ற பிராமி எழுத்துகளே தமிழ் எழுத்துகளாக உருமாற்றம் பெற்றன என்பது எவ்வாறு பொருந் தும் எனத் தெரியவில்லை.

தமிழ்-தாமிழி-திராவிடம்

மற்றொரு கருத்தும் ஆய்வாளர்களிடையே வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தின் குகையில் காணப்படும் தமிழ் கல்வெட்டு களில் காணப்படும் எழுத்துகளைப் பிற மொழி அறிஞர்கள் “தாமிழி’ என்ற பெயாரால் அழைக்கிறார்கள் தமிழ்' என்பதன் மறுஉ சொல்லே தாமிழி' என்பதாகும். இதுவே தென்னக மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழியாக அமைந்தது எனக் கருதப்படுகிறது. இதனையே திராவிட மொழி என்ற பெயரா லும் மொழியியற் புலவர்கள் அழைககிறார்கள். ஆனால், "தாமிழி எழுத்துகள் எனக் கூறப்படும் மொழி எழுத்துகள் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துகளே என்பதை மொழியியற் புலவரும் கல்வெட்ழுத்து ஆய்வாளருமான கே வி சுப் பிரமணிய அய்யர் அவர்கள் தக்க ஆதாரங்களுடன் நிறுவிக் காட்டி யுள்ளார்.

மேலும் தாமிழி எழுத்து வடிவங்களின் அமைப்பு முறையும் சொல், சொற்றொடர் இலக்கண மும் தொல்காப்பிய இலக்கண நூலுள் கூறப்படும் இலக்கண விதிமுறைகளுக்கு முற்றிலும் இயை புடையதாகவே உள் ளது என்பதும், அஃது சமஸ்கிருதம் முத லான வடபுல மொழிகளின் இலக்கண விதிகளுக்கு இணக்க முடையதாக இல்லை என்பதும் வனிக்கத்தக்க ஒன்றாகும்.

தாமிழியே பிராமி!

அசோகர் தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழர்களின் மேன்மையான வாழ்க்கைப் போக்கையும் அறிவாற்றலையும்