பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

209

இங்கு ஏழு எழுத்துகள் குறைந்தன என்றால் அவை தமிழ் நெடுங்கணக்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன என்பது பொரு ளல்ல. அதன் வரிவடிவத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அவ்ளவே. சான் றாக, "ன" என்ற வரிவடிவம் ‘ணா என மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறே அண’ என்ற எழுத்து 'ணை. என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எழுத்துச் சீர்மை செய்யப்பட்டதனால் எந்த எழுத்தும் தமிழ் நெடுங்கணக்கி லிருந்து விலக்கப்படவில்லை என்பதைத் தெளிவாக உணர

6ՆՈT ԼԸ -

எனவே, தமிழில் மேலும் சில எழுத்துச் சீர்மைகள் காண முயல்வது தமிழின் ஒலி வடிவங்களையோ எழுத்து வடிவங்களை யோ அறவே நீக்குவதல்ல. வரி வடிவில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் அவை இன்னும் சிறப்பாகவும் விரைவாக வும் எளிதாகவும் நமக்குப் பயன்படும் என்பதற்காகவே ஆகும்.

சக்தி, கால விரையங்களைத் தவிர்ககவே சீர்மை முயற்சி

மேலும், கணின போன்ற கருவிகட்கேற்பப் பயன்படுத்து வதற்கு மட்டுமல்லாது தமிழை சுலபமாகக் கற்கவும் எழுதவும் எளிமையுடைய மொழியாகக் கையாளவே எழுத்துச் சீர்வை பற்றிச் சிந்திக்கப்படுகிறது. இதனால் பெருமளவில் சக்தி விரைய மும் கால விரையமும் தவிர்க்கப்படலாம

கணினி ஊழி

இஃது கணினி ஊழி. உலகெங்கிலும் கணினி வளர்ச்சியும் பெருக் கமும் பூதா காரமாக விரிவடைந்துள்ளது. தொடக்கப் பள்ளியில் மொழி கற்பது முதல் நுண் அறுவை மருத்துவம் (Micro Surgery) செய்வது வரை அனைத்துத் துறைகளிலும் தன் ஆற்றலை கணினி நிலைநிறுத்தி வருகிறது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் பட்டம் வரை

வரவிருக்கும் 21ஆம் நூற்றாண்டில் கணினி தொடர் பில்லாத தமிழனைக் காண முடியாது. அவனது அன்றாட வாழ் வின் சகல அம்சங்களிலும் நீங்கா இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தப்போவது கணினியே என்பது மிகைப்படுத்திக் கூறுவ

தல்ல. எதிர்காலத்தில் கணினி கல்வியே கல்வியாக மதிக்கப் படும். கணினி பற்றிய கல்வி இல்லாதவர் கல்லாதவராகக்

74