பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

வருவதனால் கிடைத்த பட்டறிவின் அடிப்படையில் கண் டுணர்ந்த உண்மை ஆகும். இன்று உலக இதழான "யுனஸ்கோ கூரியர்' இதழில் மிக நுணுக்கமான இக்கால அறிவியல் செய்தி களை உடனுக்குடன் சொற்செட்டோடு கூற முடிகிறதென்றால் அதற்கு யாருடைய திறமையும் காரணமல்ல. அது தமிழ் மொழி யின் ஆற்றலையே சார்ந்ததாகும்.

தமிழைப் பல்லாற்றானும் காக்க முனையும் அதே சமயத்தில் அறிவியல் ஊழியின் இன்றியமையாத் தேவையைக் கருத்திற் கொண்டு, தமிழை வளர்த்து வளமூட்டுவதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடுடையவர்களாக இருக்கிறோம், அறிவியல் தமிழ் பல்வேறு கூறுகளையுடையதாக உள்ளது. ஒவ் வொரு பிரிவின் திட்ப நுட்பங்களை அறிந்து, அவற்றைப் பேணி வளர்க்க முயலவேண்டும். இப்புதுமைத் துறைகள் புத்தம் புதிய துறைகள் போன்று தோற்றமளித்த போதிலும், இவற்றிற்கான அடித்தளம் ஏதோ ஒரு வகையில் தமிழில் இருந்தே வந்துள்ளது, அவற்றின் வளர்ச்சிப் போக்கைக் காலத்தின் கோலத்திற்கேற்ப மாற்றித் திருத்தி வளர்க்க வேண்டியதே நம் பொறுப்பாக உள்ளது.

அவ்வகையில் அறிவியல் தமிழாகக் காலத்தின் தேவையை யொட்டி தமிழ் எவ்வத்துறைகளில் முனைப்புடன் வளர்ந்து வளம் பெற வேண்டும் என்பதை அடுத்துவரும் அத்தியாயங் களில் வரலாற்றுப் போக்கில் ஆராய்வோம்.