பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

வருகின்றன. இதற்கு ஓரளவேனும் ஈடுகொடுக்கும் முறையில் நம் சிந்தனைப் போக்கிலும், அதற்கு ஆதாரமான தமிழ் மொழியிலும் மாற்றங்கள் பல ஏற்படுவது தவிர்க்க இயலா ஒன்றாகும்.

இத்தகைய மாற்றத்திற்கேற்ப சமய அடிப்படையில் புராண, இதிகாச இலக்கிய உணர்வில் திளைத்துக் கிடந்த புலவர்களும் எழுத்தாளர்களும் நூலாசிரியர்களும் விஞ்ஞானக் கூறுகளின் பால் சிந்தனையைச் செலுத்தி அறிவியல் அடிப்படையிலும் நூல் களை எழுதத் தொடங்கினர். இதன்மூலம் அறிவியல் தமிழ் எனும் தனிப்பிரிவும் உருவாகி வளர்ந்து வளமடைய ஏதுவா

யிற்றி.

ஒரு காலத் சில் இயற்றமிழாக இருந்தது. பின இசைத் தமிழும் நாடகத் தமிழும் இணைய முத்தமிழாக முகிழ்த்தது. இஃது காலத்தின் தேவையால் எழுந்த வளர்ச்சியாகும். இன்றை யச் சூழலில் தமிழ்த் துறைகள் மேலும் விரிவடைந்து, அறிவியல் தமிழ் எனும் புது இயலும் இணைய நாற்றமிழாக-நான்கு தமிழாக விரிந்து வளர்ந்துள்ளது. நாளை இஃது மேலும் விரிவடைய லாம்.அது காலத்தின் கையிலுள்ளது.