பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47

'வைத்தியம்' (Proctice of Medicine) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. 88 இல் வெ.பா. சுப்பிரமணிய முதலி யாரால் நல்ல தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக “3 m si b6DLu9uusi” (Veterinary science) 6rsắrp Hirsi @susif வந்தது இதில் கையாளப்பட்ட புதிய சொல்லாக்கங்கள் பலவும் சிறப்பான கலைச் சொற்களாக இன்றளவும் இத்துறையினரால் தமிழில் கையாளப்பட்டு வருவனவாக உள்ளன என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழில் வெளி வந்த அறிவியல் நூல்களில் பல யாழ்ப்பாணத்தில் அச்சிடப் படடவைகளாகும்.

இருபதாம் நூற்றாண்டில் உயர்நிலைப் பள்ளிவரை பாட மொழி தமிழாக்கப்பட்ட பின்பே அறிவியல் பாடநூல்கள் பலவும் தமிழில் தழுவலாகவும் மூலமாகவும் பெருமளவில் எழுதி வெளி யிடப்பட்டன. தமிழ் வளர்ச்சியில் அக்கரை கொண்ட ராஜாஜி போன்ற அரசியல் தலைவர்களும் பெ.நா. அப்புசாமி போன்ற எழுத்தாளர்களும் அறிவியலைத் தமிழில் சொல்லும் முயற்சியில் முனைப்புக் காட்டி உழைத்தனர்.

பயிற்சி மொழியில் திருப்புமுனை

அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பாதையில் 1980ஆம் ஆண்டை ஒரு திருப்பு முனையாகவே கருதலாம். அதுவரை படிப்படியாக வளர்ச்சி பெற்ற நிலையில் பல அறிவியல் தமிழ் நூல்கள் வெளி வந்தன 1980ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடுநிலைப் பள்ளி வரை இருந்த தமிழ் பயிற்சி மொழித் திட்டம் பள்ளி இறுதி வரைக்கும் நீடிக்கும் எண்ணத்திற்கு வித்திட்டது.இந்த ஆண்டில் தான். முதலில் கலைப் பாடங்களையும் பின்னர் அறிவியல் பாடங்களையும் தமிழில் கற்கலாயினர். இதனால் கலைப் பாட நூல்களும் அறிவியல் பாட நூல்களும் பெருமளவில் எழுதிக் குவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழில் பொதுவான அறிவியல் நூல்கள் வெளிவந்ததோடு பத்திரிகைகளில் அறி வியல் கட்டுரைகளும் அதிக அளவில் எழுதப்படும் சூழ்நிலை உருவாகியது

தமிழில் கலைச் சொற்கள்

1985 வரை தமிழில எழுதப்பட்ட நூல்களாயினும் கட்டுரை களாயினும் அவை தரமான நல்ல தமிழிலே அமைந்தவை எனக் கூறுவதில்லை. சிறந்த எழுத்துக்களோடு கூடிய சமஸ்கிருதச்