பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56

கம்பிக்கை தரும் வளர்ச்சி

மொத்தத்தில் அறிவியல் நுட்பங்களை படைப்பதிலும்: அவற்றை வெளியிடுவதிலும், வாங்கிப் படிப்பதிலும் முன் எப் போதையும்விட ஊக்கமும் உற்சாகமும் வியக்கத்தக்க வகையில் வளர்ந்துவருவது, எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையூட்டு வதாக உள்ளது

அறிவியல் நூல் வெளியீடு பெருக

அறிவியல் தமிழ் நூல்கள் பெருமளவில் வெளியிட அரசு சில முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசிய மாகும். படித்தவர்களின் தொகை குறைவு. அதிலும் அறிவியல் நூல்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களின் தொகை மிகக் குறைவு. இன்னும் சொல்லப் போனால் விலை கொடுத்து வாங்கி இத்தகைய நூல்களை விருமபிப் படிப்பவர்களின் எண்ணிக் கைத் தமிழகத்தைப் பொருத்தவரை மிக அரிதாகவே உள்ளது. எனவே, நூலாசிரியர்களும் பதிப்பகங்களும் அறிவியல் நூல்களை எழுதவும் வெளியிடவும் மிகவும் தயக்கம் காட்டுவது இயல்பே. அவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு பொது நூலகங் களுக்கு வாங்கும் நூல்களில் அறிவியல் நூல்களுக்கு முந்துரிமை வழங்குவது ஏற்புடைத்தாகும். பள்ளி நூலகங்களுக்கு அரசே வாங்கி வழங்கலாம்.

மேலும், அறிவியல் நூல் எழுதும் எழுத்தாளர்களை ஊக்கு விக்கும் வகையில் இத்தகைய நூல்களுக்கு விரிவான பரிசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் நிதியுதவி தந்தும் ஊக்கு விக்கலாம்.