பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

88

புதிய இலக்கிய வடிவில் பக்திப் பாடல்கள்

பொருட் செறிவுமிக்கதாக, சற்றுக்கடின நடையில் இயற்றப் பெற்ற சங்கப் பாடல்களின் போக்கிலிருந்து பக்தி இயக்க காலப் பாடல்கள் எளிமையும் நெகிழ்வுத்தன்மையுமுடையதாக மாற்றம் பெற்றன. புலமைக்கு முதன்மை தந்து உருவான சங்கப் பாடல் கள் போலன்றி மக்களின் உள்ளத்தை எளிதாக ஈர்க்கவல்ல புதிய இலக்கிய வடிவங்களான ஊசல், பள்ளியெழுச்சி, அம் மானை, பாவை ஆகிய இலக்கிய வடிவங்களில் பக்திப் பாடல் கள் எழத்தொடங்கின. படிப்பறிவு குறைந்த சாதாரண மக்களின் உள்ளத்தை ஈர்க்கவல்ல இத்தகைய இலக்கிய வடிவங்கள் மூல மாகச் சமய தத்துவ, சித்தாந்த உணர்வுகளை, இறைவனைப் பற்றிய சிந்தனையை எளிதாக மக்கள் மனதில் விதைக்கவே இத்தகைய இலக்கிய உத்திகள் பின்பற்றப்பட்டன. இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக புலமைத் தமிழாக இருந்தது பொதுமக்கள் தமிழாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நடை போடலாயிற்று.

இயற்றமிழ் இசைத் தமிழாகியது

சங்கப் பாடல்களில் இசைக் குறிப்புகள் காணப்பட்டாலும் இசைக்கேற்ற பாடல்களாக பெரும்பாலானவை அமைய வில்லை. சிலப்பதிகாரத்தில் விரிவான இசைபற்றிய குறிப்புகள் இடம்பெற்றதோடு வேட்டுவ வரி, குன்றக்குரவை போன்ற பகுதி களில் இசைப்பாடல்கள் பல இடம் பெற்றன.

ஆனால், பக்தி இயக்க க லத்தில் உருவாக்கப்பட்ட தேவாரம் முதலான சைவ இலக்கியங்களும் வைணவப் பாசுரங் களும் இசைப்பாடல்களாகவே உருவாக்கப்பட்டன. இவ்வாறு இயற்றமிழாக இருந்த தமிழை சமயத் தமிழாக மட்டுமின்றி இசைத்தமிழாகவும் பரிணமிக்க வழிவகுத்த பெருமை பக்தி இயக்க கால இலக்கியங்களுக்கு உண்டு.

விரிந்து வந்த இலக்கிய வடிவங்கள்

அத்துடன், பக்தி இயக்க காலத்தில் கோவை, உலா,"மடல், என்றெல்லாம் புதிய புதிய இலக்கிய வடிவங்களில் தமிழ் இலக் கியம் படைக்கப்படலாயின.

இயல்பான கற்பனையும் இயல்பிறந்த கற்பனையும்

சங்க கால இலக்கியங்களில் ஒரு தனித் தன்மையைக் காண லாம். கற்பனை அதிகம்.கலவாத நடைமுறை வாழ்வியலை