பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77

போரிடுவதோ கூடாது. தற்காப்புக்காகப் போரிடுவதில் தவ றில்லை' என்ற கோட்பாட்டின் படி, முஸ்லிம்கள்மீது தாக்குவதற் கெனப் படையெடுப்பு நடத்திய எதிரிகளின் பெயரிலேயே "படைப்போர் இலக்கியங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு எழுந்த இலக்கியங்களின் எண்ணிக்கை பதினான்கு ஆகும்.

கொண்டி நாடக வகை

தமிழுக்காக என்றே இஸ்லாமியப் புலவர்கள் உருவாக்கிய மற்றொரு இலக்கியவகை நொண்டி நாடகம் ஆகும்.

தொண்டி நாடகத்தின் கதாநாயகன் தன் ஒருகாலை மடித் துக் கட்டிக்கொண்டு, ஒருகால் இல்லாதவனாக, மற்றொரு காலால் தொண்டியடித்தபடி மேடையில் ஒரு காலால் தத்தித் தத்தி ஆடிப்பாடுவான். அப்போது, தான் காலை இழந்ததற் கான காரணத்தையும், தான் தவறு செய்ய காரணமாக இருந்த சமுதாயப்போக்கின் சீர்கேட்டையும் கூறி, மற்றவர்கள் இதே தவறைச் செய்யாது அறநெறி வழி நின்று நன்னிலை அடையு மாறு வேண்டும் வகையில் அமைவதே நொண்டி நாடகம். இஃது 'ஒற்றைக் கால் நாடகம்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு.

சமுதாயப் போக்கில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை, பொருளா தார ஏற்றத்தாழ்வுகளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் பல் வேறு வகையான தீமைகளை சீர்திருத்தப் போக்கில் மக்கள் உள்ளம் ஏற்கும் வண்ணம் கூறுவது இதன் நோக்கமாகும் மக்களிடையே ஒருவித விழிப்புணர்வை ஊட்ட இத்தகைய உத்தியை இலக்கிய வடிவமாக மாற்றிப் பயன்படுத்தினர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்

திருமண வாழ்த்து இலக்கியவகை

இஸ்லாமிய த் தமிழ்ப் புலவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு இலக்கிய வடிவம் திருமண வாழ்த்து’ எனும் வகை யாகும்.

முந்தைய தமிழ் இலக்கியங்களில் மணமக்களை வாழ்த்தும் வாழ்த்துப் பாக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், திருமண வாழ்த்து’ என்ற பெயரில் தனிஇலக்கிய வடிவமாக உருப்பெற் றிருக்கவில்லை. அத்தகைய புதுவகையான இலக்கியத்தைப் படைத்து வளர்த்த பெருமை முஸ்லிம் தமிழ்ப் புலவர்களையே