பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90

ஒரிரண்டு இதழ்கள் இதற்கு விதி விலக்காக இருக்க லாம்.

பலமும் பலவீனமும்

மனித உணர்வுகளிடையே மிகமிக மேலோட்டமான உணர் வாக அமைந்திருப்பது பாலுணர்வாகும். பாலுணர்வு என்பது மனிதனின் மகத்தான பலம். அதுவே அவனது மோசமான பலவீனமாகவும் அமைந்துள்ளது. பலமான பகுதியை விட்டு விட்டு பலவீனமான பகுதியைக் கையாள்வதிலே பத்திரிகை களும் அவற்றின் ஆதரவை நாடும் எழுத்தாளர்களும் பெரிதும் ஆர்வங்காட்டுகின்றனர். அத்தகையோர் வெப்ப மூ ட் டு ம் பாலுணர்வு இலக்கியங்களை எழுதி, காசு திரட்டும் திருப்பணி யில் தயங்காது ஈடுபட முனைகின்றனர். இதனால் இளைய தலைமுறைக்கு ஏற்படும் தீமைகளைப்பற்றி யாரும் அதிகம் சிந்திப்பதில்லை

ஆதரவின்மைக்கு அடிப்படைக் காரணம்

அப்படியே சமூக நலச் சிந்தனையுடன் அறிவியல் போக்கி லான கதைகளை வெளியிட சில பத்திகைகளும் எழுத்தாளர் களும் முயன்றால்கூட அதற்கு வாசகர்களிடமிருந்து போதிய ஆதரவும் அரவணைப்பும் வருவதில்லை என்ற கூற்றிலும் உண்மை இல்லாமலில்லை.

இதற்குக் காரணம்தான் என்ன? தமிழகத்தைப் பொருத்த வரை கதை படிப்பவர்களின் பெரும்பான்மையினராக அமைந் திருப்பவர்கள் பெண் வாசகர்களேயாவர். ஆண்களில் இளம் வயதினர்களில் சிலரே கதைகளை ஊன்றிப் படிப்பவர்களாக உள்ளனர். மற்றபடி பெரும்பாலான ஆண் வாசகர்கள் துணுக் குகள், கார் டுன்கள். சில அரசியல் கட்டுரைகள், விவாதங் கள், தலையங்கம் போன்றவைகளோடு சரி.

மேலும், பெண் வாசகர்களில் அறிவியல் உண்மைகளை உட்கொண்டு படைக்கப்படும் கதைகளில் உள்ள அறிவியல் நுட்பங்களை உணர்ந்து தெளியும் அளவுக்குத் தரமான உயர் கல்வி பெற்றவர்கள் அண்மைக்காலம் வரை அதிகம் இல்லை. இதனால் நுட்பமாகப் புனையப்படும் அறிவியல் புனைகதை களைப் போதிய அளவில் இவர்களால் ரசித்து மகிழ முடிந்த தில்லை. இதுவும் அறிவியல் புனைகதைகள் தமிழில் பிரபலமடை யாமல் இருந்து வந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன் றாகும்.