பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 34 ஆவது பாளையக்காரராக வந்தவர் அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர். இளமையிலேயே தந்தை இருக்கும்போதே பல பொதுப்பணிகளில் ஈடுபட்டார். முதல் உலகப் பெரும் போரின்போது படைக்கு ஆட்களைச் சேர்ப்பதில் மிக உதவினார். கோவையில் கௌரவ நீதிபதியாக இருந்தார். படையில் பெரிய அதிகாரியாக இருக்கச் சென்னை ஆளுநரால் அழைக்கப் பட்டார். ஆனால் இவர் அப்பதவியில் சேரவில்லை . இவருடைய பணிகளைப் பாராட்டிப் பட்டங்களும் பதக்கங் களும் பல வழங்கப்பட்டன. 1932 இல் வேல்ஸ் இளவரசர் சென்னை வந்தபோது அவரைச் சிறப்புடன் வரவேற்றார். நாடு போற்றும் நல்லோராக விளங்கிய இவர் 1936 இல் மறைந்தார். இவருக்கு அளிக்கப்பட்ட பல பாராட்டுக் களில் மாதிரிக்காக இரண்டு இங்குக் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. The Kumara Poligar of Uttukuli Sri Agathur Muthu Krishnaswami Kalingarayar, the eldest son and heir, is now actually managing the affairs of the poliem after the retirement of his revered father. He took a leading part in the year 1919 in the recruitment of men for field service in Mesapatomia. He was appointed Honorary Assistant Recruiting Officer for the Pollachi Taluk. He recruited the largest number of men from Coimbatore District, especially in the Pollachi Taluk. He was awarded a certificate of Merit and a Medal for the valuable Services rendered in the recruitment of men for field service. The following is a copy of the badge and sannad presented;