பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காலிங்கராயன் கரையில் 'காடெல்லாம் சிறு செந்நெல் விளையும்" என்று இலக்கியம் எடுத்துரைத்ததற்கு ஏற்பக் காலிங்கராயன் கால் வாயால் சிறப்பு மிக்க நீர்வளம் ஏற்பட்டு நிலவளம் பெருகி நன்செய் விளைவு ஏற்பட்டுள்ளது எல்லோரும் அறியும் உண்மையாகும். காலிங்கராயன் கடாட்சத்தினாலே சாலவே இந்தத் தரணியில் வாழும் குடியானவர்கள்' என்று ஈரோடு ஜயனாரப்பன் பள்ளு கூறுவதற்கு ஏற்பக் காலிங்கராயனால் ஏற்பட்ட நன்மைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். கரையில் கீழ்வரும் ஊர்கள் அமைந்துள்ளன. அடைப்புக்குறிக்குள் இருப்பது கால்வாய் மைல் ஆகும். அணை நாசுவம் பாளையம் (0/0) இராமநாதபுரம் புதூர் (4.21) பெரிய அக்கிரகாரம் (7.11) ஈரோடு (14.0) | சாத்தனூர் (20.00) சாவடிப் பாளையம் (24.0) காளமங்கலம் (27.2) பாசூர் (31.13)| பழனிக்கவுண்டம் பாளையம் (32.4) வட்டக்கல் வலசு (34:4) மலையம் பாளையம் (35.23) கொளாநல்லி (37.4)