பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 வயல்களாக மாற்றப்பட்டன. மக்கள் மேட்டுப்பகுதிக்கு மேற்கு நோக்கிக் குடி பெயர்ந்தனர். சாத்தம்பூர் மக்கள் நஞ்சை ஊத்துக்குளிக்கு குடி பெயர்ந்ததை இதற்கு எடுத்துக் காட்டாகக் காட்டலாம். பல இடங்களில் கால்வாயினால் இவ்வாறு குடிப் பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஊர் அழிவுபட்டதால் பழைய சில ஊர்ப் பகுதிகள் நத்தம் என்று அழைக்கப் பெற்றன. பள்ளர் நத்தம், சத்திர நத்தம், பூச்சக்காட்டு நத்தம் என்பன அவற்றுட் சிலவாகும். கால்வாய் வளம் ஏற்பட்டவுடன் சில ஊர்கள் நஞ்சை, புஞ்சை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. நஞ்சை லக்காபுரம், புஞ்சை லக்காபுரம், நஞ்சைக் காள மங்கலம், புஞ்சைக் காளமங்கலம், நஞ்சைக் கொளாநல்லி, புஞ்சைக் கொளாநல்லி என அவை அழைக்கப்பட்டன. வயல்வெளியில் நெற்போர் அடிக்கக் களங்கள் அமைக்கப்பட்டு அதன் அருகில் வீடுகள் அமைக்கப்பட்டுச் சில சிற்றூர்கள் அதனால் களம் என்றே அழைக்கப்பட்டன. இலட்சுமண கவுண்டன்களம், ஆலைக்காட்டுக்களம், கம்பங் காட்டுக்களம் என்பன அவ்வாறு அமைந்த ஊர்களாகும். கால்வாய் பாய்ந்து வளம் ஏற்பட்ட காரணத்தால் பழைய ஊர்களின் அருகே அப்பெயரில் புது ஊர்களும், புதிய குடியிருப்புக்களும் பல ஏற்பட்டன. அதனால் பிற பகுதியைக் காட்டிலும் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் ஊர்ப் பெருக்கமும் மக்கள் தொகைப் பெருக்கமும் மிகவும் மிகுதியாக ஏற்பட்டன. புதுப்பாளையம், அணைக்கட்டுப் புதூர், வடக்குப் புதுப்பாளையம், தெற்குப் புதுப்பாளையம், மிளகாய்ப் புதுப்பாளையம், சேட்டையூர் புதூர், சாத்தம் புதூர், இராயபாளையம் புதூர், இராமநாதபுரம் புதூர், புத்தூர், ஆட்டுக் கவுண்டன் புதூர், குள்ளக்கவுண்டன் புதூர், முத்துக் கவுண்டன் புதூர், சாவடிப்பாளையம் புதூர், அமராவதி