பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

117 புதூர், பொறையம்பாளையம் புதூர் என்பன அவ்வாறு புதியன வாக ஏற்பட்ட ஊர்களாகும். ஈரோடு, காளமங்கலம், பாசூர், கொளாநல்லி, ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி போன்ற பல ஊர்களில் புதிய கோயில்கள் பல கட்டப்பட்டன. பழைய கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன. கொடைகள் பல அளிக்கப் பட்டன. விழாக்கள் விரிவாக நடத்தப்பட்டன. கல்வெட்டுக் களும் பொறிக்கப்பட்டன. அந்தணர்கட்கு அக்கிரகாரங்கள் பல ஏற்படுத்தப் பட்டன. அவர்கட்குக் கொடையாகப் பிரமதேய நிலங்கள் அளிக்கப்பட்டன. அக்கிரகாரம் என்ற ஊர்ப்பெயரும், பட்டவர்த்தி என்ற நிலப்பெயரும் வழங்குவது இதற்கு எடுத்துக்காட்டாகும். பலர் பூந்துறை நாட்டின் பல பகுதியி லிருந்து கால்வாய்ப் பகுதிக்குப் புதியவர்களாகக் குடியேறி னர். கால்வாய்ப் பகுதி மக்களுடன் பூந்துறை நாட்டின் பிற பகுதி மக்கள் அங்குள்ள செல்வச் செழிப்பின் காரண மாக உறவு கொள்வதில் ஆர்வம் காட்டினர். கால்வாய்க் கரையில் உள்ள ஊர்கள் மிகுதியான செல்வவளம் பெற்றன. பொருளாதாரப் புழக்கம் மிகுதி யாக ஏற்பட்டது. ஈரோட்டில் தென்னகத்திலேயே மஞ்சள் வணிகம் சிறந்து விளங்குவதற்குக் காலிங்கராயன் கால்வாய் முக்கியக் காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மை யாகும். ஈரோடு செல்வச் செழிப்புற்று வாணிகம் மிகுதியாகப் பெருகுவதற்கும், காலிங்கராயன் கால்வாய்ப் பகுதிமக்கள் பலர் ஈரோட்டில் குடியேறி அதன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மூல காரணமாக அமைவதற்கும் கால்வாய் வளமே காரண மாக அமைந்தது. கால்வாய்ப் பகுதியில் ஆலயங்கள் பெருகவே விழாக்கள் மிகுதியாக நடைபெற்றன. வாத்தியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், சமயச் சடங்கு, ஆலய வழிபாடு நடத்துவோர்