பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 சர்க்கார் பெரியபாளையும் சுக்ரீவேசுரர் கோயில் அர்த்தமண்டபம் தென்புறம் பட்டிகைவரிக் கல்வெட்டு ஸவஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரி மேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு ஆண்டு இருபத்தி நாலாவது வீரசோழவளநாட்டு முகுந்தனூருடைய குரக்குத் தளி ஆளுடைய நாயனார் கோயில் தானத்தார்க்கு இந் நாயனார்க்கு அமுதுபடிக்கும் திருநாள் படிக்கும் திருப்பணிக் கும் வேண்டும் வெஞ்சனாதிகளுக்கும் திருமடை விளாகத் துக்கு மேற்கில் நல்லாட்டுக்குளம் அனாதி பாழ்பட்டுக் கெடக்கையில் யிக்குளமும் நீரேறிப் பாயும் நிலமும் திருநாமத் துக் காணியாகக் குடுத்தோம் இதுக்கு இறுக்கும் கடமையில் நிலவச்சு மற்றும் யெப்பேர்ப்பட்ட வரிகளும் கழிச்சுக் குடுத்தோம் யிப்படிக்கு இவ்வோலை பிடி பாடாகக் கொண்டு சந்திராதித்தர்வரை செல்வதாகச் செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க... இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து இவை பெருமாள் வீரராசேந்திரச் சோழச் சக்கர வர்த்தி எழுத்தின்படி சிலவு அழிக்க இது பன்மாகேஸ்வரர் ரட்சை இந்த தர்மத்துக்கு விகாதம் பண்ணும் பேர்கள் னாளை நசிச்சு போவார்கள். குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுக் குன்றத்தூர் இலட்சுமி நாராணப் பெருமாள் வீரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதியாருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இந் நாயனாருக்கு அமுதுபடி உள்ளிட்ட வேண்டும் வெஞ்சனங் களுக்கும் இந்த நாட்டில் காடு பிடித்து அழித்துக்கொண்டு நாடாக்கின வெள்ளிரவெள்ளி நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் காடும் குளமும் குளப்பயிராய் உள்பட்ட நிலத்தில்... சந்திராதித்தர் வரை செம்பிலும் சிலையிலும் வெட்டிக்