பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை எண்-2 காலிங்கராயன் அணை கட்டின பட்டயம் ஸ்ரீமது சுபநமஸ்து ஸ்ரீமன் மகாமண்டலீசுவரன் பாசைக்கி தப்புவராத கண்டன் ஆரிய தள விபாடன் ஆரிய மோகந்தவிழ்த்தான் துலுக்கர் தள விபாடன் துலுக்கர் மோகந் தவிழ்த்தான் தொட்டிய தள விபாடன், தொட்டிய மோகந் தவிழ்த்தான் ஒட்டிய தள விராடன் ஒட்டிய மோகந் தவிழ்த்தான் பலநாவுக் குறைவராத கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாத கண்டன் வினவிசை கனவிசை ஈழமும் ஆழமும் ஓரப்பான் பட்டணமும் ரதபதி கெசபதி அசுவபதி நரபதி நால்வகைப் படைமோடுங்கூடி கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசமார்த் தாண்டன் ராசகுல திலகன் ராசகெம்பீரன் நாடாளு நாயகன் றாட குலதுங்கன் பூலோக தேவேந்திரன் ஆரண முறையார் ஆறிலொன்று கடமை கொண்டு ஆடுங்கடைமணி நாவசையாமல் அரசாளும் கரிகால் சோழன் மகாராசாவய்ய ரவர்கள் யகமகிழ்ந்து கொடுக்கும் மக்கள் முறையும் தரிப்பான நன்மையும் பொருந்தியிருத்தியிருந்தபடியினாலே பொன் ஊஞ்சலும் பூந்தேரும் பூச்சக்கரக் குடையும் பெற்றருளிய கங்கா குல திலகன் காராள சிரோமணி மேழிக் கொடியோன் மின் குவளை மாளிகை மார்பன் நாற்பத்தி யெண்ணாயிரம் கோத்திரத்துக்கும் முதன்மையாயிருக்கும் கொங்கு தேசத்துக்குச் சேர்ந்த தென்கரை நாட்டு செட்டி வேணாவுடையான் நரைய நாடு காசிப கோத்திரம் பிரமியணபிள்ளை பொங்கலூரு தெய்வசிகாமணி பூந்துறை நாடு வாரணவாசி வெள்ளோட்டுக் கனகபுரம் நஞ்சையன் ஆருநாட்டு மசக்காளி வேலணன் குருப்பை நாட்டு ரகுநாதணன் ஒடுவெங்க நாடு முத்துவேலப்பன் நல்லுருக்கா நாடு வானவராயன் வாரக்க நாடு பொங்கணன் காவுலுக்கா