பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 மூலை போதிக்கு ஒரு ரூபாயும் மகமை நடந்து வந்தபடியி னாலே அந்தப் பாதிகாவலும் மகமையும் அனுபவிச்சுக் கொண்டு அரமனையிலே கட்டுப்பண்ணின நிகுதி பணமும் செலுத்திக் கொண்டு ஆண்டு அனுபவித்துக்கொண்டு வரும் நாளையில் என் முப்பாட்டனார் நாளிலே பாதிகாவல் விட்டுட்டுப்போய் மலையாளத்து கோளிகூடு ராசாவின் பேரிலே யுத்த கனுகத்திலே யெலைபள்ளியிலே விளுந்து போய் விட்டார்கள் என் தோப்பனார் நாள் முதல் சுங்கம் மகமை நடந்து வந்தது. என் தமையனார் ரெண்டுபேர் நாளையிலேயும் திப்பு சுல்தான் அங்காமி நாள் வரைக்கும் ஒரு நிகுதியில்லாமல் சில்லரை கள்ளர் அங்காமிகளுக்கும் தொந்தரைகள் பட்டுக் கொண்டு யிருந்தார்கள். பூர்வம் முதலாக வமுசா வளி முதலானதுகளுக்கு உண்டான ஆதாரங்கள் முதலான துகளும் காலாந்திரங் களிலே ராசீகங்களிலே கைசோர்ந்து போய்விட்டபடியி னாலே அகப்பட்ட பூர்வத்திய பளமுளி கிரந்தங் களினாலேயும் ஒளுகுகள்யாலேயும் பரம்பரையிலே அனுபவித்த கேள்வியினாலேயும் தெரிந்து கொண்டு கைபீது தெரியப்படுத்திக் கொள்ளலாச்சுது. கம்பெனி ஆட்சி கலியுகாபுதம் 4891 மேல் செல்லா நின்ற விரோதிகிருது வருஷம் மாசி மாதம் 4 தேதி சுபதினத்தில் எனக்குப் பட்டமாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டர் என்னப் பட்ட பேர் விளங்கிக் கொண்டவனாகயிருந்து திப்பு சுல்தான் துரைத்தனத்தில் சில்லரை கள்ளர் தொந்தரவுகள் பட்டுக்கொண்டு இருக்கும் நாளையில் மகாராஜ ராஜஸ்ரீ கும்பினி துரைத்தனமாகிறது என்று ரொம்பவும் சந்தோஷத்தை அடைந்தவனாய் குஞ்சு குழந்தைகளை யெல்லாம் பெம்பாயி சீர்மையிலே வச்சுப் போட்டு நான் ஊற்றுக் குழியிலே ஹாஜரிலே காத்துக்கொண்டு கும்பினி