பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 சோர்வில்லாத முயற்சியும் அயராத உழைப்பும் அனைவர்மீதும் பற்றிப் படரும் அன்பும் தடைக்கு அஞ்சாத ஆற்றலும் கொண்டு விளங்கியவர் காலிங்கராயர் என்று அவர் வாழ்க்கைக் குறிப்புக்கள் மூலம் தெரிகிறது. இவர் கற்பவை கசடறக் கற்றவர். செல்வத்துட் செல்வமாம் செவிச் செல்வமும் சிறக்கப் பெற்றவர். வெள்ளோட்டுக்காரர்களும் பூந்துறை நாட்டவர் அனை வரும் கொங்கு நாட்டவர் எல்லோரும் காலிங்கராயன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தனர். காலிங்கராயர் வடமொழி, தமிழ் இரண்டிலும் பெரும் புலமை படைத்திருந்தார் என்றும், திருக்குறளுக்கு உரை இயற்றிய 10 தொன்மையான புலவர்களில் காலிங்கர் என்பவர் நமது காலிங்கராயரே என்றும், புருஷசூக்தமாலா என்னும் வடமொழி நூலுக்குத் தமிழில் விரிவுரை கண்டார் என்றும் கரூர்ப் பெரும்புலவர் அ. கணபதி ஐயா அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்கள். காலிங்கராயர் பற்றிய தனிப்பாடல் ஒன்றில் கற்ற அறிவினன்' என்று குறிக்கப் பெறுவதால் கணபதி ஐயா கூறுவது உண்மையாக இருக்க லாம் என்று எண்ணத் தோன்றுகிறது. காவிரியை ஒட்டியுள்ள மேடு பள்ளமான இடத்தில் மிகுந்த பொறியியல் திறத்துடன் நிலத்தை நன்கு அளந்து திட்டமிட்டு ஆராய்ந்து கால்வாயை வெட்டியுள்ளார். கணிதம், பூகோளம் போன்ற கலைகளில் காலிங்கராயன் மிகவும் வல்லவராகத் திகழ்ந்திருக்க வேண்டும். பொறியியல் கலையில் மிகவும் மேலோங்கிய ஆற்றலையும் அறிவையும் காலிங்கராயர் பெற்றிருக்க வேண்டும். பிறந்த ஊர் 'பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரன்' என்று ஆவணங்கள் கூறினாலும் காலிங்கராயன் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் தென்