பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம் மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியதேவன் தன் 40 ஆம் ஆட்சியாண்டில் உரிமைகள் சிலவற்றை உவந்தளித்தான். அப்பெண்ணின் பெயர் 'நக்கன் செய்யா ளான காலிங்கராயத் தலைக்கோலி' என இன்றும் நின்று நிலவுகிறது; அங்குள்ள கல்வெட்டு மூலம்! காலிங்கராயன்-நாணயமும் வரியும் காலிங்கராய வினியோகம்' என்ற பெயரில் ஒரு வரி இருந்தது என்று நெரூர், வெஞ்சமாங்கூடல் கல்வெட்டுக் களால் அறிகின்றோம். இது காலிங்கராயன் செய்த பணிகட்காக நாட்டு மக்கள் அளித்த வரி என்பார் கல்வெட்டாய்வாளர் திரு தி. நா. சுப்பிரமணியனார். இது காலிங்கராயன் கால்வாயின் பராமரிப்புக்கு மக்கள் செலுத்திய வரியும் ஆகலாம். இன்னும் கொங்கு நாட்டில் காலிங்கராயன் காசு', 'காலிங்கராயன் பணம்' என்ற நாணயங்கள் வழக்கில் இருந்தமையை அறிகின்றோம். ஒப்புமைப் பெயர்கள் அரசியல் அதிகாரிகட்கு அரசர்கள் வழங்கிய காலிங்க ராயன் என்ற பட்டப்பெயரை ஒத்து வேறு பற்பல பட்டப் பெயர்களையும் ஏறக்குறைய அதே காலத்தில் அளித்துள்ள னர். அவர்களுட் சில வருமாறு : அழகராயன், இராசாண்டராயன், ஈழத்துராயன், கச்சிராயன், களப்பாளராயன், கனகராயன், காங்கேய ராயன், காடவராயன், குமணராயன், குருகுலராயன், கொங்கராயன், சி மிஞ் சராயன், தன்மபோதிராயன், தெலுங்கராயன், தென்னவராயன், தொண்ணராயன், பாஞ்சாலராயன், மலையப்பியராயன், மாதவராயன், மழவ ராயன், மூவேந்தராயன், வத்தவராயன், வாணாதிராயன், வில்லவராயன், வைகைராயன், வைசியராயன், வைதும்ப ராயன்,