பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அணையும் கால்வாயும் “ நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே' என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடுகின்றார். உணவு கொடுத்தவர்கள் உயிரையே கொடுத்தவர்கள் ஆகிறார்கள். உணவு நிலத்தோடு நீர் சேர்வதால் உண்டாவது. எனவே நிலத்தொடு நீர் சென்றடையும் பணியை யார் செய்கிறார்களோ அவர்கள் உடம்பையும் உயிரையும் காப்பவர்கள் ஆகின்றார்கள் அவர்கள் புகழே உலகில் நிலைத்து நிற்கும் என்பது இப்பாடல் கருத்து. இதை அறிந்தே தமிழக அரசர்கள் பலரும் காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர் அரசர் வழி நின்ற உயர் அலுவலர்களும் அரசர்களைப் போன்ற நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கும் பணியைத் திறம்படச் செய்தனர். போர்க்களத்திற்குச் சென்று போரிட வீட்டுக்கொருவர் புறப்பட்டு நாட்டைக் காத்தனர். அதேபோல் ஆற்றை அடைத்து வேளாண்மையைப் பாதுகாக்கவும் வெள்ளத்தை அடைத்து முறைப்படுத்தவும் வீட்டுக்கொருவர் புறப்பட்டுச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்ற பாண்டியன் ஆணையைத் திருவிளையாடல் புராணக் கருத்து நமக்கு அறிவுறுத்துகிறது.