பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேளாள சாதியான படியினாலே 'கவுண்டர்' என்கிற நாமதேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து 'காலிங்கக் கவுண்டன்' என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான் கட்டி வைச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும், காலிங்கக் கவுண்டன் வாக்கியால் என்றும், தான் உண்டுபண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட நெல்லுக்குக் 'காலிங்க நெல்லு' யென்றும் விளையப் பண்ணிச் சம்பந்த பாத்தியங்களும் செய்து கொண்டு இருந்தான்" என்பதே கால்வாய் வெட்டியதுபற்றி வமிசாவளி கூறும் செய்தியாகும். இன்றும் இந்நினைவு மாறாமல் 'காலிங்க ராயன் அணை' என்றும், வாய்க்கால் 'காலிங்கராயன் வாய்க்கால்' என்றும் அணையின் அருகிலுள்ள ஊர் 'காலிங்கராயன் பாளையம்' என்றும் வழங்கப்பெறுகின்றன. இக்கால்வாய் நீர்பாய்ந்து விளையும் நெல்லுக்குக் காலிங்க நெல்லு' என்று பெயர். இச்செயற்கரிய செயலைச் செய்த பெருந்தகையின் காலத்தில் இவன் பெயரால் காலிங்கராயன் காசு, காலிங்கராயன் பணம் என நாணயங்கள் வழக்கத்தில் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவற்றை நோக்கக் காலிங்கராயன் மீது நாட்டினர் கொண்ட அளப்பரிய பற்றை அறிகின்றோம். ஆங்கில நூல் கருத்து

  • இந்தியாவின் ஆளுந்தலைவர்களும் பெருமக்களும் நிலக் கிழார்களும்' என்னும் ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளிக் கருத்தைப் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது. ஆனால் கனவில் தோன்றிக் கூறியவர் வெள்ளோடு சர்வ லிங்கேஸ்வரன் என்பதற்குப் பதிலாகச் சுப்பிரமணிய சுவாமி கூறினார் என்றும், பாம்பு வழிகாட்டிச் சென்றது என்பதற்கு மாறாகப் பாம்பு சென்றிருந்த வழியையே பின்பற்றிக் கால்வாய் வெட்டினான் என்றும், அந்தப் பாம்பையும் மயில் துரத்திக்கொண்டு சென்றது என்றும் ஆங்கில நூல் கூறுகிறது. எனவே, அது முதற்