பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒரு கனவு நனவாகியது! கல்லும் கதைசொல்லும் என்பார்கள் : இங்கே கால்வாய் கதை சொல்லுகிறது. கதை என்றால் கற்பனையா? இல்லை; அவை அவ்வளவும் வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும். வெள்ளோடு உலகபுரம்கரை வெள்ளமுத்துக் கவுண்டன் வலசில் மேட்டாங்காட்டில்' பிறந்து, திருப்பூர் கருவம் பாளையத்தில் இளமையில் வளர்ந்த நான் தொலைவில் உள்ள நன்செய் வளம் கொழிக்கும் காலிங்கராயன் கால்வாய்மீது காதல் கொண்டதே ஒரு கதைதான்! என் தாயார் திருமதி நல்லம்மாள் சென்னிமலைக் கவுண்டர் காலிங்கராயன் கால்வாயின் உரிமை ஊர்களில் ஒன்றான சாமிநாதபுரம் மேக்கால்' வீட்டைச் சேர்ந்தவர் கள்: அத் தொடர்பும் ஒரு காரணமாக இருக்கலாம். என் மாமா, அத்தை, அக்கா ஆகியோர் காலிங்கராயன் கால்வாயின் மடியில் தவழும் சாவடிப் பாளையம் புதூரில் உள்ளனர். சாவடிப்பாளையம் புதூர் சென்று காலிங்கராயன் கரையில் மாமாவின் தோட்டத்து மாமரத்தில் மாங்காய் பறிக்கும்போதும், அத்தை வீட்டாரோடு நட்டாற்றீசுவரன் கோயில் செல்லும்போதும் என் மாமாமார்களான சொங்கப்பன், குமாரசாமி, எஸ். பி. கந்தசாமி ஆகியோர் என்னிடம் இளமையில் கூறியவை: • இதோ! இந்தக் காலிங்கராயன் கால்வாய் உங்கள் பங்காளி வெட்டியது; இதன் தண்ணீரை நீங்கள் குடிக்கக் கூடாது. இக் கால்வாயில் விளையும் நெல்லைக் கூடச் சாப்பிடக் கூடாது'