பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

63 பெற்றாரையன் என்னும் சொல்லின் திரிபாக இருக்கலாம். அவர் 'காலிங்கராயனைப் பெற்றாரையனாக' அதாவது காலிங்கராயனின் தந்தையாக இருக்கவேண்டும். ஒரு சிறந்த தலைவனைப் பெற்றெடுத்த பெற்றோருக்குச் சிலை வைத்து வழிபடுவக பண்டைய வழக்கம். உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவிக்குச் சிலை வைத்து வழிபட்ட னர். அவரை ஸ்ரீ மதுராந்தக சோழ தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவி" என்று கல்வெட்டுக்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. எனவே காலிங்கராயனுக்கும் காலிங்கராயனின் தந்தைக்கும் நாட்டினர் நன்றி மறவாது அக்கோயிலைக் கட்டினர் என்பது புலனாகும். தலைமதகில் தெய்வத் திருவுரு காலிங்கராயன் அணையின் தலைமதகின் அருகில் உள்பக்கம் இடப்புறம் கிழக்கு நோக்கி ஒரு சிறிய மேடையும் அதன்மீது ஒரு பாம்பின் சிலையும் இருக்கின்றது. பாம்பின் அருகில் மேடையில் ஒருசிலை இருக்க வேண்டிய இடம் காலியாக உள்ளது. அங்குச் சிலை இல்லை; ஆனால் காலிங்கராயனின் சிலையைப் பிரதிட்டை செய்திருந்த இடம் அதுவாகவே இருக்கலாம் என ஊகிக்க முடியும். பீடத்தில் கிழக்கு நோக்கி ஒரு தூண் பதிக்கப்பட்டுள்ளது. அதில் அரசக்கோலத்துடன் சிலை ஒன்று செதுக்கப்பட்டுள் ளது. அந்தச்சிலை காலிங்கராயன் சிலையாக இருக்கலாம். கல்வெட்டு ஒன்றும் அங்கே காணப்படவில்லை. சாசனம் இருப்பதாக வமிசாவளி கூறுகிறது. ஆனால் அஃதிருக்கும் இடம் தெரியவில்லை . மேலே குறிப்பிட்ட இவ்விரண்டிடங்களில் ஒன்று தான் முதலில் காலிங்கராயனுக்கு ஏற்பட்ட கோயிலாக இருக்க வேண்டும். முதலில் அணைத்தோப்பில் தான் கோயில் கட்டி யிருப்பர். பவானியாற்றில் மிகுதியாக நீர் வரும் காலங் களில் ஆற்றைக் கடந்து அங்கு சென்று வழிபட இடையூறாக