பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சில குறிப்புக்கள் கோவை மாவட்டக் கெசட்டியர், மானுவல் போன்ற நூல்களிலும், இந்தியாவை ஆண்ட நிலக்கிழார்கள் பற்றிய ஆங்கில வரலாற்று நூலிலும், முத்துசாமிக் கோனாரின் 'கொங்கு நாடு' என்ற நூலிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய குறிப்பைக் காணுகின்றோம். கொங்கு நாட்டின் முதல் தரமான கால்வாய் ஆகிய இதன் கரையின் எல்லா இடங்களும் சோழ நாட்டைப் போன்ற மிக வளம் பொருந்தியதாகக் காணப்படுகின்றன. கி.பி. 1799 இல் கொளா நல்லிக்கு அப்பால் உள்ள கரையின் பெரும்பகுதி உடைந்துவிட்டது. கொளாநல்லிக்கு அப்பால் தண்ணீரே செல்லவில்லை. அதனால் தான் புக்கானன் 1800ஆம் ஆண்டில் 3459 ஏக்கர்கள் பாய்ந்ததாகக் குறிப்பிடுகின்றார். 1840 மதகுகளில் 1762 முதல் 1799 வரை ஐதர், திப்புவிற்கும் ஆங்கிலேயர்க்கும் நடைபெற்ற போரில் பல மதகுகள் சீர்குலைந்து சிதைந்துவிட்டன. காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் எடுத்த ஓர் அளவையில் நீர் பாயும் நிலங்களில் 31% வண்டல் கலந்த களிமண் என்றும், 68% செம்மண் என்றும், 1% மணல் என்றும் அறிகின்றோம். 1880 இல் 7545 ஏக்கர்கள் தாம் நீர் பாய்ந்தது. ஆனால் இப்பொழுது 15, 743 ஏக்கர்கள் நேரடியாக நீர்வளம் பெறுகிறது. பதிவு செய்யப் பெறாத வகையிலும், வலப்புறப் பாசனத்திலும் 5400 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன. மொத்தம் 21,143 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின் றன. கால்வாயின் நீளம் 56 மைல் 5 பர்லாங்கு 350 அடி ஆகும். வினாடிக்கு 650 கியூசெக்ஸ் தண்ணீர் அணை யிலிருந்து விடப்படுகிறது.