பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சரி மரியாதைகளும் கொடுக்கப்படாது என்று சொன்ன தினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்குக் காவிடிக்கை நாட்டுப் பிறவுத்வம் பண்ணிக் கொடுத்து இருக்கிற படியினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்டபடியினாலே வெள்ளோடு விட்டு மன வெறுப்பினாலே ஆனைமலைச் சருவிலே தங்கள் காணி ஆட்சியான காவிடிக்கா நாடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்த மாடுகளைச் சம்ரட்சனை பண்ணுகிறதுக் காகத் தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டு வனத்துக்கு வந்து... தம்முடைய மாட்டுப்பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டி யிருக்கப்பட்ட ஊற்றுக் குழிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊருகட்டிவச்சபடியினாலே ஊற்றுக்குழி என்ற கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவராய் இருந்தார்கள்' இச்செய்தி ஊத்துக்குழி அகத்தூரம்மன் கோயில் கல்வெட்டு மூலமாகவும் உறுதிப்படுகிறது. கால்வாய் வெட்டிய காலிங்கராயனுக்குப் பின் அக் குடும்பத்தில் வந்த அனைவரும் காலிங்கராயர் என்றே பெயர் தரித்துக் கொண்டனர். பூந்துறை நாட்டை விட்டு ஊத்துக்குழி சென்ற காலிங்க ராயர் தமிழகமெங்கும் மாத்திரை செய்தார். கொங்கேழு சிவாலயங்களை வணங்கினார். பல தான தருமங்கள் செய்தார். ஊத்துக்குழியில் அகத்தூர் அம்மன் ஆலயத்தைக் கட்டினார். வடக்கே யாத்திரை சென்று ஒய்சள மன்னனிடம் பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார்.