பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 98

இந்தக் குறுக்குக் கம்பங்களின் அருகே சிறுசிறு காடுகள் உண்டாக்கப்பட்டன. இவ்வாறு தண்ணீர் இரு கரைகளிலுமிருந்தும் கால்வாய்களுக்குப் பாய்ச்சப்பட்டன.

2. அணைக்கட்டுகளிலேயே மிக்க பழமைவாய்ந்தது என்று சொல்லப்படுவது நதியுண்ணி அணைக்கட்டாகும், இது அம்பாசமுத்திரத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. இது பெரிய சிமெண்டு பூசப்படாத கற்களால் கட்டப்பட்டுள்ளது. ‘நதியுண்ணி’ என்பது ‘நதியைக் குடிப்பது’ என்று பொருள்படும். இந்த அணைக்கட்டைச் சேர்ந்த கல் ஒன்று ஆற்றுப்படுகையில் இப்பொழுது இருக்கிறது. அதில் இவ்வணைக்கட்டு மிகவும் அண்மைக் காலத்திலேதான் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. கல்வெட்டுக் கூறுவதாவது: ‘நதியுண்ணி அணை கொல்லம் ஆண்டு சாலிவாகன ஆண்டிற்குச் சமமான கி.பி.1759 இல் கான்சாகிபுவின் அறக்கொடையாகக் கட்டப்பட்டது. கான்சாகிபு என்பவன் புகழ்பெற்ற மகம்மது யூசுப்கான் ஆவான். அக்காலத்தில் அவன் ஆட்சிப் பீடத்திலிருந்தான். அவனைப் பற்றிப் பின்னர் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் உள்ளன. இவ்வணைக்கு அருகேயுள்ள சில உள்ளூர் வாழ்நர் அந்த அணைக்கட்டு முதலில் பழைய பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டது என்றும் பின்னர்க் கான்சாகிபு அதைச் செப்பனிட்டுப் பலப்படுத்தினானென்றும் கூறுகிறார்கள்.

3. மிக்க புகழ்வாய்ந்த அணைக்கட்டு ஆங்கிலேயர்களால் கனடியன் அணைக்கட்டு என்று வழங்கப்பட்ட அணைக்கட்டாகும். இதன் பொருள் கன்னட இனத்தவன் ஒருவனால் கட்டப்பட்டது என்பது. இது அம்பாசமுத்திரத்திற்கு எதிரில் இருக்கிறது, அந்தக் கன்னடியன் சம்பந்தப்பட்ட இக்காலக் கதைகள் பல உள்ளன. அந்தக் கன்னடியன் உள்ளூர்த் தேவதையின் அருளால் மிக்க செல்வம் பெற்றான் என்றும் அத்தேவதை அவனுடைய செல்வத்தை ஓர் அணைக்கட்டுக் கட்டுவதில் செலவிடும்படி கட்டளையிட்டதாகவும் அக்கதைகளுள் ஒன்று கூறுகிறது. எல்லா அணைக்கட்டுகளும் ஒருவனாலே கட்டப்பட்டன என்று மற்றொரு கதை கூறுகிறது. ஒரு பசு வழிகாட்டியாக அனுப்பப்பட்டதென்றும் அப்பசு எங்கெல்லாம் படுத்து எழுந்ததோ அங்கெல்லாம் ஒவ்வொரு. அணைக்கட்டுக் கட்டப்பட்டதென்றும் கூறப்படுகிறது. அந்தப் பசு அம்பாசமுத்திரத்திற்கும் கடலுக்கும் இடையே ஆறு இடங்களில் படுத்தெழுந்ததாகவும் அதன்படி தெய்வக் கட்டளையால் பெற்ற நிதியிலிருந்து அந்தக் கன்னடியன் ஆறு அணைக்கட்டுகளைக்