பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 100

வெட்டியதாகவும், மிஞ்சிய பணத்தில் சேரன்மா தேவியில் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பார்ப்பனர்களுக்கு நாள்தோறும் சாப்பாடு போடுவதற்காக ஒரு சத்திரம் கட்டினான் என்றும் இச்செப்புச் சாசனத்தை வைத்திருந்தவரை, அச்சத்திரத்திற்கு நிலையான மேற்பார்வையாளராக நியமித்ததாகவும் கூறுகிறது.

அந்த ஆசிரியர் செப்புச் சாசனத்திலுள்ள வாசகத்தின் கருத்தையே கூறுகின்றார்:

இக்குறிப்பிட்ட செப்புச் சாசனம் எங்களால் ஈட்டப்பட்டது. இது நாராயணப்பய்யா என்பவரால் எழுதப்பெற்றது. இவர் குண்ணடுயார் குடும்பத்தைச் சேர்ந்தவர்; பார்ப்பன பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்; ரிக்வேத உபாசகர். இவர் வேலூரை ஆண்டுவந்த மகாராஜா கஜபதி பிரதாபருத்ர ராயரிடமிருந்து கலாபுருஷதனம் என்ற நன்கொடையைப் பெற்றார். அவ்வாறு பெற்ற இவர் தர்மம் செய்யத் தீர்மானித்துப் பணத்துடன் திருப்பதியை அடைந்தார். அங்கு வேங்கடாசல சுவாமியை வேண்டி அத்தெய்வத்தின் அருள் பெற்றார். அக்கடவுளின் ஆணைப்படி தென்னாடாகிய திருவடி தேசத்தைச் (திருவாங்கூர்) செப்பனிட்டார். இத்தேசத்திலுள்ள மலபாசல மலையில் அகஸ்திய முனிவரைச் சந்தித்தார். அவர் உத்தரவுப்படி பார்ப்பனர்களின் நலனுக்காக விவசாய வாய்க்காலை வெட்டினார். எஞ்சிய பணத்தில் பார்ப்பனர்களின் தினசரி உணவிற்காக ஒரு சத்திரம் கட்டத் தீர்மானித்தார். அதன்படி, தாமிரபரணியின் தென்கரையில், சேரன்மாதேவிக்கு மேற்குப் பக்கத்தில் உள்ள அழகிரியப்பசாமி கோவிலுக்கருகே ஒரு கட்டடம் கட்டினார். கோபாலப்பிள்ளையின் தந்தையாராகிய நாராயணப்பிள்ளை பார்ப்பனர்! பூரீவத்ச கோத்ரம். யஜூர் வேத உபாசகர். சேரன் பெருமாள் ராஜாவினால் கட்டப்பட்ட பழைய கிராமம் அல்லது பார்ப்பன கிராமத்தில் வசித்து வந்தார். அவர் இந்தச் சத்திரத்தை மேற்பார்வை செய்யும் பொருட்டு இச்சாசனத்தின் மூலம் நிரந்தர மானியதாராக நியமிக்கப்பட்டார். இது சிரவண நட்சத்திரம், பஞ்சமி ஆஷாட மாதம், செளமியநாம ஆண்டு (கலி 3342) கி.பி. 242 அன்று பதிவு செய்யப்பட்டது. இச்சத்திரத்தின் நிருவாகத்திற்காக 2587 கலியுகராமன் மதுரை வெள்ளைப் பணங்கள் (இந்நாணயம் இன்றும் திருவாங்கூர் நோட்டாய் இருக்கிறது) பெறுமான நிலங்களும் துண்டுநிலம் ஒன்று 135 பணங்கள் பெறுமான ஒன்பது துண்டு நிலங்களும் மானியமாக எழுதப்பட்டுள்ளன. அன்றியும், தினப்படிச் செலவிற்கான கட்டணங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. மேற்பார்வையாளர் நாராயணப்பிள்ளைக்குச் சம்பளமாக ஒரு