பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105 கால்டுவெல்


போர்ச்சுகீசியரின் முதற்படையெடுப்பு

செம்படவ மக்களாகிய பரவர்களின் பிரதிநிதிக் கூட்டம் மூர்கள் அல்லது முகம்மதியர்களுக்கு எதிராகத் தங்களுக்கு உதவிபுரியுமாறு போர்ச்சுகீசியரின் உதவியை நாடிக் கொச்சி சென்றபோதுதான் 1532இல் ஆதார பூர்வமான போர்ச்சுகீசியர் படையெடுப்பு திருநெல்வேலிக் கடற்கரைமீது ஏற்பட்டது. அக்காலத்தில் கடற்கரையில் மிக முக்கியமான இடம் இப்போது முகம்மதியர்கள் வசித்துவரும் காயல்பட்டினமாகும். இதற்கும் பழைய காயல் பட்டினத்திற்கும் அடிக்கடி பெயரளவில் குழப்பம் ஏற்படும். கொச்சிக்குச் சென்ற பிரதிநிதிக் கூட்டத்தில் 70 பேர் இருந்தனரென்பது சொல்லப்படுகிறது. அவர் விண்ணப்பத்தில் அவர்கள் வெற்றி கண்டார்கள். எனவே, படையெடுப்புத் தயாராகியது. கொச்சியிலிருந்த வைக்கன் தளபதியாகிய பாதர் மிச்சல்வால் என்பவரும் கடற்படைக்கப்பலில் சில பாதிரிகளுடன் சென்றார். சில ஆண்டுகட்குப் பின் அவர் ‘கன்னியாகுமரி கிறிஸ்தவர்களின் உண்மைத் தகப்பனாகி’ விட்டாரென்று சேவியர் வருணிக்கின்றார். கொச்சியிலுள்ள போர்ச்சுகீசியருக்கு விடுத்த வேண்டுகோள் வெற்றியடையவே பரவர்கள் தங்கள் நாட்டில் போர்ச்சுகீசியரின் வேதத்தைத் தழுவ விருப்பமுடையவர்களாயிருப்பதாகப் புதிதாக மதம் மாறிய ஜோன்டிகுரூஸ் என்ற உள்நாட்டவர் ஒருவருடைய யோசனைப் படி தெரிவிக்கப்பட்டது. கொச்சியிலேயே பாதர் வாஸ் தூதுக் குழுவிலுள்ள அனைவரையும் முறைப்படி மதமாற்றினர். போர்ச்சுகீசியர் மகம்மதியர்களை வென்ற பின்பு வாஸ், கடற்கரைக்குச் சென்ற போது முப்பது கிராமங்களில் வசித்துவந்த 20,000 பரவர் மதம் மாறினர் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது 1532 இல் திருநெல்வேலிக் கடற்கரையில் போர்ச்சுகீசியர் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர் என்று நாம் கூறுவதில் தவறில்லை. மகமதியத் தலைவர் கொல்லப்பட்டு அவர்களுடைய வலிமை அழிக்கப்பட்டது என்று சேவியர் எழுதுகிறார். 1542 இல் அவர் கடற்கரைக்கு வருகை புரிந்த போது முத்துக்குளித்தல் முழுவதும் போர்ச்சுகீசியர் வசமாயிற்று. சேவியர் காலத்தில் போர்ச்சுகீசியர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இடங்கள் மணப்பேடு, புன்னைக்காயல், தூத்துக்குடி, வேம்பார் என்பவை. ஆனால், டாக்டர் பர்னல் எனக்குத் தெரிவித்த பழைய போர்ச்சுகீசிய எழுத்தாளர்களின் குறிப்பின்படி 1582 வரை புன்னைக்காயல் அவர்களது முக்கியக் குடியேற்ற நாடாயிருந்ததென்பதும் தூத்துக்குடி முக்கியமற்ற ஓர் இடமாய்