பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111 கால்டுவெல்


செய்திகளுக்காக நான் டாக்டர் பர்னலுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அவர் பழைய போர்ச்சுகீசிய எழுத்தாளர்களிடமிருந்து பெரும்பாலும் டிசெளசாவிடமிருந்து சேகரித்துக் கொடுத்திருக்கிறார்.

1551 - இரு மருத்துவசாலைகளையும் கல்விச் சாலைகளையும் புன்னைக்காயலில் நிறுவினர்.
1552 - கடற்கரையில் முக்கிய இடமாகிய புன்னைக்காயலில் ஒரு மண் கோட்டை இருந்தது. அந்தக் கோட்டை படகர்களால் கைப்பற்றப்பட்டது. கெளண்டிஹோ என்ற முத்துச் சலாபத் தலைவன் தோற்கடிக்கப்பட்டான்.
1553 - புன்னைக்காயல் கள்ளிக்கோட்டையில் இருந்து வந்த கடற்படையால் மீட்கப்பட்டது.
1560 - ஐம்பது பேர்களடங்கிய இராணுவக்கோட்டைபுன்னைக் காயலில் இருந்தது.
1563 - 1563க்குப் பிறகு சீசர் பிரடரிக் என்பவர் கடற்கரைக்கு வந்த போது முத்துக் குளிப்பவர்களைக் காணப் போர்ச்சுகீசிய அரசனுடைய பிரதிநிதிகளைக் கண்டு உத்தரவுபெற வேண்டியிருந்தது. ஆகவே, மதுரை நாயக்கர்கள் அதுவரை அதிக வலிமையடைய வில்லை.
1570 - முத்துக்குளிக்கும் கரையில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. பாதர் ஹியரிகுவெஸ் என்பவர் பஞ்ச நிவாரண விடுதிகளை ஏற்படுத்திச் சிலவற்றில் ஐம்பது பேருக்குத் தினந்தோறும் உணவு வழங்கியதுடன் செபஸ்டியான் என்னும் கிறிஸ்தவ முத்துக்குளிப்பவருக்குப் பத்தில் ஒரு பங்கு முத்துச்சிப்பிகளைக் கொடுத்தார்.
1578 - பாதர் ஜோவா டிபாரியா என்பவர் தமிழ் எழுத்துக்களை அச்சாக வெட்டி மதசம்பந்தமான சில புத்தகங்களை அதே ஆண்டில் திருநெல்வேலி கடற்கரையாகிய பெஸ்காரியாக் கரையில் அச்சிட்டார் என்று டிசெளசா கூறுகிறார். அப்புத்தகங்கள் கிறிஸ்தவ போதக நூல்கள், பிளாஸ் சாங்க்டோரியம் அதாவது முத்திபெற்றவர்கள் வாழ்க்கையின் சிறு குறிப்புகள் முதலியவை.

பாலினஸ் என்ற அர்ச். பர்த்தலோமியோவும் கொச்சியைப் பற்றி அதே குறிப்பைக் கொடுத்திருப்பது தெரிகிறது. 1577 இல் கொச்சியில்