பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131 கால்டுவெல்


இருந்தது. இவர் 200 பேல் பஞ்சை அவரிடமிருந்து வாங்கிக் கொழும்பில் ஒரு பிரதியை ஏற்படுத்தி, இந்தப் பேல்களை இலண்டனுக்கு எடுத்துச் செல்லத் தூத்துக்குடிக்கு ஒரு கப்பலையும் அனுப்பி வைத்தார். நேரடியாகத் தூத்துக்குடியிலிருந்து பஞ்சு இலண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது இதுவே முதல் தடவை என்றாலும் பணத்தில் நல்ல லாபம் கிடைத்தது. அடுத்தாற்போல் 1832 ஆம் ஆண்டு கொழும்பு பஞ்சு வியாபாரம் தொடர்பாகத் தூத்துக்குடியில் பஞ்சடிக்கும் ஆலையை முதன் முதலில் கட்டினான். பிறகுதான் பஞ்சடிக்கும் ஆலைகள் சென்னை வியாபாரிகளாலும் மற்றவர்களாலும் கட்டப்பட்டன. முதலில் பெருந்திரு. பகோல்ட் தம் தந்தையாருக்குப் பிறகு தூத்துக்குடியின் தலைமை அதிகாரி ஆனார். அப்பொழுது குருவ்ஸ் கம்பெனியின் பிரதிநிதியாய் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால், அக்கம்பெனியார் பின்தங்கவே, அவர் தனியாகச் சொந்தத்தில் தொழிலை ஆரம்பித்தார்.

பாளையங்கோட்டைக் கோர்ட்டுக்கு அருகே பெருந்தெருவில் ஹியூஸினுடைய பஞ்சாலையின் இடிந்த தளங்கள் இருப்பதைக் காணலாம்.

ஜெனரல் வெல்ஷ்

1801 ஆம் ஆண்டு முடிவில் பாளையக்காரர் போர் முடிந்ததும் முன்பு தலைவராயிருந்த ஜெனரல் வெல்ஷ் என்பவர் (இவரே கட்டபொம்மு மருதுபாண்டிய உடன் பிறப்பாளரை வேட்டை ஆடியவர். - ந.ச.) தூத்துக்குடியை அடக்கவும் அவர் அதிகாரத்தின் கீழ் தலைமையான எதிரிகள் எழுபது பேரை பினாங்கிற்கு அனுப்பி வைக்கவும் அனுப்பப்பட்டார் ஜெனரல் வெல்ஷ். தூத்துக்குடியில் பாதுகாப்பான கோட்டை அரணுடன் கூடிய ஆலை இருந்தது. அது கடல்நீரில் முழுகிச் சுத்தமான சிறு நகராயிருந்தது. கடற்கரைக்கு எதிரேயுள்ள வீதியில் சில அழகிய வீடுகள் இருந்தன. அங்குச் சுமார் ஐயாயிரம் உள்நாட்டுவாசிகள் இருந்தார்கள் என்று விவரித்துள்ளார். அந்த இடத்திலிருந்து அவர், இரண்டொரு நாள்களில் கடல் வழியாகக் கொழும்புக்குச் செல்லலாம். வளைகுடாவில் எப்பொழுதும் பலமான காற்றுகள் அடிக்கும். எனவே, போகும்பொழுதும் வரும் பொழுதும் இக்காற்று மிக்கப் பயனைத் தரும் என்று எழுதியிருக்கிறார். அங்குள்ள ஆலை வீட்டில் டச்சுக் கவர்னர் வசித்து வந்தார். அதில் எல்லா வசதிகளும் நிரம்பிய அறை குளிர்ச்சி பொருந்தியது. இவை தவிர, அவருக்கு உள்நாட்டில் மூன்று மைல் தூரத்தில் ஒரு தோட்ட வீடும் இருந்தது. 1810 இல் தூத்துக்குடிக் கோட்டை ஆங்கிலேயரால்