பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 132


அழிக்கப்பட்டது. (அந்தக் கோட்டை அழிக்கப்பட்டாலும், இந்த ஊரில்தான் தேசபக்தர் வ.உ.சி. பிரிட்டிஷ் பேரரசால் அழிக்க முடியாத விடுதலை இயக்கக் கோட்டையைப் பின்னாளில் கட்டினார் - ந.ச.).

தூத்துக்குடி

இப்போது தூத்துக்குடி திருநெல்வேலியிலுள்ள முக்கிய துறைமுகம் மட்டுமின்றித் தென்னிந்தியப் பஞ்சு வியாபாரத்திற்குச் சிறந்த வாணிபசாலையாகவும் விளங்குகிறது என்பதைக் கூற விரும்புகிறேன். இது எல்லா விதங்களிலும் முன்னேறி வருகிறது. சமீபத்தில் திருச்சிராப்பள்ளி, மதராஸையும் திருநெல்வேலியையும் இணைக்கும் ரயில் இடமாக்கப்பட்டதால், அதன் தரம் இன்னும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலியிலுள்ள நகராட்சியாரின் ஆட்சிக்குட்பட்ட சில நகரங்களில் இதுவும் ஒன்று. 1871 இல் இதன் மக்கள் தொகை ஏறக்குறைய 11,000 ஆகும்.