பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133 கால்டுவெல்




இயல் - 4

ஆர்க்காட்டு நவாபு ஆட்சிக்காலம் முதல் மகம்மது யூசுப்கான் ஆட்சிக்காலம் வரை

மதுரை நாயக்கர் ஆட்சியின் முடிவு

நாம் இப்பொழுது நாயக்கர் காலத்தின் இறுதிக்கு வருவோம். மதுரைக்குப் பதிலாகத் திருச்சிராப்பள்ளி நாயக்க நாட்டின் தலைநகர் ஆயிற்று. (தற்போது திருச்சி டவுன் ஹால் எனப்படுவது ராணி மங்கம்மாள் அரசவை என்பார்கள் - ந.ச.). திருச்சிராப்பள்ளி திருநெல்வேலியிலிருந்து மதுரையைவிட நெடுந்துரத்திலிருப்பதால், திருநெல்வேலி வரலாற்றுத் தொடர்பான செய்தி இக்காலத்து ஆவணங்களில் கிட்டவில்லை. எனவே, நான் ஒரு சிறிய குறிப்பு மட்டும் கொடுத்து அமைய எண்ணுகிறேன். ஆர்க்காட்டு நவாபுவின் பதவிக்காகப் பிரெஞ்சுக்காரர்கள் ஆதரித்த சந்தாசாகிபுக்கும் ஆங்கிலேயர்கள் ஆதரித்த முகம்மது அலிக்கும் இடையே போட்டி நடந்த காலம் வரை திருநெல்வேலி முக்கியத்துவம் இல்லாத ஒரு சாதாரண மாவட்டமாகவே இருந்ததென்பது தெளிவாகிறது.

1731 இல் நாயக அரச மரபின் கடைசி அரசரான விஜயநகர சொக்கநாதர் வழியுரிமை இன்றி இறந்துவிட்டார். அவருக்குப்பின் அவர் மனைவியாரான இராணி மீனாட்சியம்மையார் அரசகுடும்பத்தில் பிறந்த ஒருவரின் பிள்ளையை வளர்ப்புப் பிள்ளையாகக் கொண்டு அவனுக்குப் பிரதிநிதியாகத் தாமே நாட்டை ஆட்சி செய்து வந்தார். ஆயினும், அவரைத் தொலைக்க முயற்சி செய்த ஒரு கூட்டத்தினர் அவர் வளர்ப்புப் பிள்ளையாக எடுத்துக் கொண்டவனுக்குத் தகப்பனராகிய பங்காரு திருமலை வாயிலாக அரசாட்சியைப் பெற முயன்றனர். மீனாட்சியம்மை யார்வசம் திருச்சிராப்பள்ளிக் கோட்டையும் அதைச் சேர்ந்த இடங்களாகிய கஜானா முதலியனவும் அவராட்சிக்குட்பட்டிருந்தன. ஆனால், திருச்சிராப்பள்ளிக்கு அப்பாற்பட்ட பல நாடுகள் பகைவர் வசமாயின.

திருச்சிராப்பள்ளியில் சந்தா சாகிபு

இக்குழப்பங்களை அறிந்த ஆர்க்காட்டு நவாபு 1734 இல் தன்