பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135 கால்டுவெல்


பாண்டி நாட்டில் முதல் முறை ஏற்பட்டது. நெல்சனின் குறிப்புப்படி பங்காரு திருமலை, சந்தா சாகிபுவைவிட பலம் வாய்ந்த மற்றொருவர் உதவியைத் தான் நாடவேண்டிய இன்றியமையாமையை உணர்ந்தான். ஓர்மின் என்பவரின் குறிப்பை விட இக்குறிப்பு ஆதாரமானதுபோலத் தோன்றியது. ஆகவே பங்காரு திருமலை சதாராவிலிருந்த மகாராஷ்டிரரிடம் சென்று தனக்கு உதவிபுரியுமாறு கேட்டுக் கொண்டான். அதன்படி 1739 இல் மகாராஷ்டிர தளபதியான ராகோஜீ பான்சலேயும், பட்லா சிங்கும் மிகப் பெரிய குதிரைப் படையுடன் தெற்கு நோக்கிப் படையெடுத்து ஆர்க்காட்டு நவாபுவாகிய தோஸ்து அலியை முறியடித்தபின் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டனர். மகம்மதியர்களை வெளியேற்ற விரும்பிய அருகிலிருந்த இந்து அரசர்களும் தஞ்சாவூர் அரசனும் இவர்களுக்குத் துணைபுரிந்தனர். கோட்டை பிடிபடும் நேரத்தில் சந்தா சாகிபு சரணடைந்ததுமன்றி, கோட்டையையும் மகாராஷ்டிரர் வசம் ஒப்படைத்துவிட்டான். மகாராஷ்டிரர் சந்தாசாகிபுவைச் சிறைபிடித்துச் சதாராவுக்கு அழைத்துச் சென்றனர். இது 1741 மார்ச்சில் நடைபெற்றது. சந்தா சாகிபு பிடிபடுவதற்கு முன்பே மதுரைக் கவர்னராய் இருந்த அவன் சகோதரன் பதாசாகிபு இறந்தான். திருச்சிராப் பள்ளியைக் கைப்பற்றிய பின் மராட்டியத் தலைவர்கள் தற்காலிகக் கவர்னராக முராரிராவை நியமித்தார்கள். முராரிராவ் மதுரையிலுள்ள முக்கியமற்ற கோட்டைகளுக்குக் கவர்னராய் அப்பாஜிராவை நியமித்தார். மதுரைக் கவர்னர் சட்டப்படி திருநெல்வேலிக்கும் அவர் கவர்னராவார். ஆனால், உண்மையில் அந்தக் கவர்னர் திருநெல்வேலியையோ அல்லது அதில் ஏதாவது ஒரு பகுதியையோ தம் ஆட்சியில் பெற்றிருந்ததற்குத் தக்க ஆதாரமில்லை. அவர் பகைவர் நாட்டிற்குள் சென்றபோதிலும் பாளையக்காரர்கள் அவனுடைய ஆணையைச் சிறிதும் கவனிக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காணலாம்.

சர் மாதவராவ் தம் தாய்மொழியில் எழுதியுள்ள திருவாங்கூர் வரலாற்றில் மராட்டியர்களால் திருச்சிராப்பள்ளி முற்றுகையிடப்படுவதற்கு முன் தென் மாவட்டங்களில் சந்தா சாகிபு பாதாசாகிபு என்பவர்களின் செயல்களைப் பற்றிச் சில மிகைப்பட்ட குறிப்புகளைத் தருகின்றார். அக்குறிப்புகளே சங்குன்னி மேனனுடைய திருவாங்கூர் வரலாற்றிலும் மீண்டும் கூறப்படுகிறது.

தன்னுடைய மூத்த மகனான சாப்தார் அலி நாட்டைப் பெறுவதற்கு விரும்பி தோஸ்து அலி சந்தாசாகிபுவையும் அவன் சகோதரனாகிய பாதாசாகிபுவையும் தெற்கேயுள்ள தமிழ்நாடுகளைக்