பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 140

இராணுவ ஆட்சி நடைபெற்ற பிரதேசம் ஆகும். பாளையத்திற்குச் சரியான தெலுங்குச் சொல் 'வாளையமு' என்பது. ஆதிகால ஆங்கிலேயர் தம் உச்சரிப்பையும் சொல்லின் எழுத்துகளையும் தங்களைப் பின்பற்றிய தெலுங்கரிடமிருந்து கற்றிருக்க வேண்டுமென முடிவு செய்யலாம். நான் கொடுத்திருக்கின்ற சொல்லிலக்கணம் உண்மையில் வழக்கிலிருக்கும் பெயரின் எழுத்துகளுக்குச் சிறப்பாகப் பொருந்தும். ஆனால், உள்நாட்டினரால் ஒப்புக் கொள்ளப்பட்ட பெயர் பாளையன்கோட்டை; பாளையங்கோட்டையன்று. பாளையன் என்பது ஒருவர் பெயர் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். என்றாலும், அது ஒரு காலத்தில் ஒரு விருதாயும் இருந்திருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கின்றனர். அதை ஒரு விருதாகக் கொண்டால், அதன் பொருள் 'பாசறையை உடையவன்' என்பதாகும். இது சாதாரண விருதாகிய 'போளிகார்' என்பதற்கு உண்மையில் ஒப்புடையதாயிருக்கிறது. இந்தப் பாளையன் என்பவன் கன்னடியன் என்று மரபுக்கதை குறிப்பதும் கன்னடத்தில் பாலிகாரின் சாதாரண விருது 'பாலேயோ', அதாவது பாளையன் என்பது பாள்வூர் அணைக்கட்டிலிருந்து விவசாயத்திற்கான தண்ணீரைப் பாளையங்கோட்டைக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் கொண்டுவருகின்ற கால்வாய். இப்பொழுதும் பாளையன் கால் - அதாவது பாளையக்காரருடைய கால்வாய் - என்று வழங்கப்படும் சூழ்நிலை மேற்கூறிய சொல்லிலக்கணத்தை உறுதிப்படுத்துகிறது. பாளையங் ஆயினும் இது உறுதியில்லாத செய்தியேயாகும். இதனால் கோட்டையிலுள்ள கோட்டை அல்லது பழைய கோட்டை அல்லது இப்போதைய கோட்டையின் மிகப் பழமையான பகுதி இருநூறு ஆண்டுகட்கு முன்பு பாளையன் என்பவனால் கட்டப்பட்டது என்பது உள்நாட்டவரின் எண்ணம் (பழையன் கோட்டை பாளையன் கோட்டை ஆனதோ? - ந.ச.). கோட்டையைக் கட்டியவனுடைய காலம் மதுரை நாயக்கர்கள் காலமாக இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கோட்டையைக் கட்டியவனும் கால்வாயை வெட்டியவனும் செவிவழிக் கதை கூறுவது போலக் கன்னடியனாய் இருந்தால், அவன் துவார சமுத்திரக் கன்னடிய அரசர்களுள் பெரும்புகழ் வாய்ந்த நாயக்கர்களுக்கு முந்திய பழைய காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்பது தோன்றுகிறது. அதற்கு மாறாகச் சாதாரண எழுத்துகளுக்கும் முடிவாகப் பாசறையைக் குறிக்கும். பாளையம்கோட்டை என்பதன் முதல் பகுதி தொடர்பாகவும் இரண்டு உதாரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், சில பழைய பத்திரங்களில் பாளையங்கோட்டை 'விலங்குளம் பாளையம்' அதாவது ‘விலங்குளம் பாசறை' என்று வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு காரணம், மேற்கே ஒரு பெரிய கிராமம்