பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153 கால்டுவெல்

கப்பம் கட்டுதல், கோட்டைகளையும் மாவட்டங்களையும் ரொக்கப் பணத்திற்கு விற்றல் முதலிய செயல்களையும் செய்து வந்தனர். இத்தகைய பொருள் ஆசையுடன் சுதந்திர உணர்வும் ஆக்கிரமிப்புக் குணமும் பாளையக்காரர் அனைவருக்குமுள்ள பொதுக் குணங்கள். இக்குணங்கள் அவர்களுக்கு மிக்க செல்வத்தைக் கொடுத்ததன்றி, பேராசையையும் தூண்டின. இத்தகைய அநீதியான ஆட்சியில் அவர்கள் செய்கின்ற கொள்ளையில் அவர்களுக்குள் சமபாகங்கள் பிரித்துக் கொள்ள உடன்பட்டு, கர்னல் ஹெரானின் படையெடுப்பு வரை தொடர்ந்து அரசு புரிந்தார்கள். இப்படையெடுப்பில் மதுரையில் அதிகாரம் செலுத்திவந்த மியானா, மதுரையை விட்டுவிட்டு அருகிலிருந்த நாட்டம் பாளையக்காரரிடம் தஞ்சமடைந்தான். மூடிமையாவும் நபிகான் கட்டாவும் திருநெல்வேலியிருந்து பூலித்தேவர் என்று பெயர் பெற்ற நெல்லித்தங்கவல்லி பாளையக்காரரிடம் திரும்பிச் சென்றனர். ஆங்கிலப்படை நாட்டை மக்புஸ்கானிடம் விட்டு விட்டுத் திரும்பும்வரை இம்மூவரும் பொறுத்துக் கொண்டு, மக்புஸ்கானை எதிர்க்கக் காத்திருந்தனர். அவர்கள் விற்ற பொருள்களில் ஒன்று திருவாங்கூர் அரசனுக்கு விற்கப்பட்ட அதிகப் பரப்புள்ள மாவட்டமாகும். இது களக்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரை முப்பது மைல் பரப்புடையது. திருவாங்கூரையும் திருநெல்வேலியையும் பிரிக்கின்ற மலையடிவாரத்தில் அமைந்திருந்தது. களக்காட்டுக் கோட்டையும் பாதுகாப்பற்ற மற்றும் பல கோட்டைகளும் இம்மாவட்டங்களுடன் சேர்த்து விற்கப்பட்டன. (திருவிதாங்கூர் தமிழகம் தோன்றிய காரணம்! - ந.ச.) திருவாங்கூர் ராஜா டிலானாய் என்ற பிளமிஷ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் மலபார் கடற்கரை இராணுவ கூட்டத்தினராகிய 10,000 நாயர்களைக் கொண்ட ஒரு காலாட்படைக்கும் ஐரோப்பிய முறையில் பயிற்சியளித்து வந்தான். இந்த நாயர்களைத் தவிர, 20,000 பல்வேறு காலாட்படைகளையும் அவன் வைத்திருந்தான்.

புதிய நவாபுவின் பிரதிநிதியாகிய மூடிமையா களக்காட்டிற்கருகேயுள்ள திருநெல்வேலியின் ஒரு பகுதியைத் திருவாங்கூர் ராஜாவுக்குச் சுமார் 1752 இல் விற்றான். அந்தத் திருவாங்கூர் அரசன் மார்த்தாண்ட வர்மா என்பவர். அவர் 1729 இல் பட்டத்திற்கு வந்து 1758 வரை வாழ்ந்தார்.

மூடிமையானிடமிருந்து வாங்கப் பட்ட மாவட்டங்கள் சுமார் 2000 ஒழுங்கற்ற காலாட்படையினரால் ஆளப்பட்டு வந்தன. அக்காலாட படைகளுக்கு எதிரிகள் இல்லை. சாதாரணக் காவலுக்கும் படை