பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 154

வருகைப் பட்டியலுக்கும் அவர்கள் போதுமானவர்களாயிருந்தார்கள். இது இந்துஸ்தானத்தில் எப்பொழுதும் அரசாங்கத்தினர் வரிவசூல் செய்வதற்கு உதவியாய் இருந்தன. ஆனால், இந்தப் படைகள் கர்னல் ஹெரான் திருநெல்வேலியை அடைந்ததையும் அவன் செய்து வந்த பயங்கரக் கொள்ளைகளைப் பற்றியும், சிறப்பாக நெல்லிக் கோட்டையில் அவர்கள் செய்த இரக்கமற்ற கொலை, கொள்ளைகளைப் பற்றியும் கேள்விப்பட்டதும், அஞ்சி நடுங்கி அவர்கள் வசமிருந்த மாவட்டங்களை மட்டுமின்றி, களக்காட்டுக் கோட்டையையும் கைவிட்டுவிட்டனர். திருநெல்வேலியிலிருந்து மக்புஸ்கானால் அனுப்பப்பட்ட 300 குதிரை வீரர்களும் 500 காலாட்படை வீரர்களும் அடங்கிய படையினால் அவை கைப்பற்றப்பட்டன. நெல்லித்தங்க வல்லியிலிருந்து ஆங்கிலத் துருப்புகள் திரும்பி வருவதற்குள் அவை திருச்சிராப்பள்ளிக்கு வரும்படி உத்தரவிடப்பட்டது தெரிந்ததே. இதையறிந்த மூடிமையா திருவாங்கூர் அரசனுடைய படைகளினால் கைவிடப்பட்ட மாவட்டங்களைத் திரும்பக் கைப்பற்றும்படி அவ்வரசனைத் தூண்ட திருவாங்கூருக்குப் புறப்பட்டான். அதே சமயத்தில் பூலித்தேவர் தம் கூலிப்படையை ஏவிக் கொள்ளையடிக்கச் செய்து திருவாங்கூர்ப் படை வந்தவுடனே அவற்றுடன் சேர்ந்து கொள்ளப் படையுடன் தயாராயிருந்தான். மக்புஸ்கான் நத்தம் மதுரையிலிருந்து திரும்பியதும் இந்தத் திட்டங்களைப் பற்றியும் ஆயத்தங்களைப் பற்றியும் எப்படியோ அறிந்து கொண்டு, உடனே திருநெல்வேலியை நோக்கி முன்னேறினான்.

பாளையக்காரர்களின் வெற்றி

மக்புஸ்கானிடம் கர்னல் ஹெரானால் விட்டுச் செல்லப்பட்ட நூறு சிப்பாய்களடங்கிய கம்பெனிப்படையுடன் அவனுக்குத் துணையாக 600 படை வீரரைக் கூட்டி அனுப்பி வைத்தான் நவாபு. இப்படை திருச்சிராப்பள்ளி போர்க்களத்தில் பயிற்சியடைந்த கம்பெனிப் பட்டாளத்திற்கு எந்த விதத்திலும் இணையில்லை. மக்புஸ்கானுக்கே இராணுவ யோசனை ஒன்றும் தெரியாதாகையால், மேலும் மேலும் படை வீரர்களைச் சேர்த்து அவன் தன்னுடன் கர்நாடகத்திலிருந்து அழைத்து வந்த வீரர்களுடன் மொத்தத்தில் 2500 குதிரை வீரரையும் 4000 காலாள்களையும் சேர்த்து விட்டான். ஐந்நூறு குதிரைவீரரும் ஆயிரம் காலாள்களும் மதுரை நகரையும் அதன் மாவட்டங்களையும் பாதுகாக்கும்படி விட்டுச் சென்றான். ஆனால் கம்பெனிச் சிப்பாய்கள் அவனுடன் திருநெல்வேலிக்குத் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் அங்குச் செல்வதற்குள் மூடிமையா திருவாங்கூர்